ஹன்சிகா மோத்வானிக்கு டைவர்ஸ் ஆச்சு..பல ஆண்டு பிரச்சனைக்கு எண்ட் கார்டு போட்ட நீதிமன்றம்! என்னாச்சு?
சென்னை: சினிமா ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்த நடிகை விவாகரத்து விவகாரம் தற்போது சட்டரீதியாக முடிவுக்கு வந்துள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹல் கதுரியா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவர்களின் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அந்த விவகாரம் உறுதியாகியுள்ளது.
இந்திய திரையுலகில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் நடிகையாக ஹன்சிகா மோத்வானி பரவலாக அறியப்படுகிறார். 1991 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர், சிறு வயதிலேயே இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கினார்.
பின்னர் தெலுங்கு திரைப்படமான தேசமுருடு மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி கவனம் பெற்றார். தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான தேசம்முதுகு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முன்னதாக இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி
அவரது தந்தை பிரபல தொழிலதிபர் என்பதோடு, தாய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதற்கு பிறகு ஒரு கல் கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, வேலாயுதம், எங்கேயும் காதல் என பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகாவின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது திடீரென திருமணம் செய்து கொள்வதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இருந்த போதும் ரசிகர்கள் அவரது திருமண வாழ்வு சிறக்க வாழ்த்தினர். தனது தோழியின் கணவரான சோஹல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சோஹல் கதுரியா
ஹன்சிகாவின் தோழிக்கும் கதூரியாவுக்கும் விவாகரத்தான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மும்பையில் கணவருடன் செட்டிலானார் ஹன்சிகா. ஆனால் திருமணமான சில காலத்திலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சோஹல் கதுரியாவின் சகோதரி, ஹன்சிகாவும் அவரது தாயாரும் தன்னை தொந்தரவு செய்கிறார்கள் என்று காவல்துறையில் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியானது.
ஹன்சிகா விவாகரத்து
அந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஹன்சிகா மோத்வானி தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இவர்களின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவத் தொடங்கின.
ஹன்சிகா திருமண விவகாரம்
இருவரையும் மீண்டும் இணைக்க குடும்பத்தினரும் நண்பர்களும் பலமுறை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் ஒருமித்த முடிவு எட்டப்படாததால், இறுதியாக இருவரும் சமரசமாக பிரிந்து விட முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹன்சிகா விவாகரத்து
இதையடுத்து ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹல் கதுரியா இருவரும் சேர்ந்து மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என்றும் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்றும் ஹன்சிகா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த மும்பை குடும்ப நல நீதிமன்றம் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை சட்டரீதியாக ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications