விற்பனை பத்திரம்.. ஒரே இடத்தில் 10 வருடம் வசிப்போருக்கு கிடைக்கிறதா விற்பனை பத்திரம்? வாவ், உண்மையா?
சென்னை: தமிழக வீட்டுவசதி வாரியம் பொதுமக்களின் நன்மைக்காகவே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சோஷியல் மீடியாவில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலம், ஏராளமான திட்டங்களில் குறிப்பாக, பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன..

வீட்டு வசதி: எனவே, தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களில், பொது மக்களும் வீடு ஒதுக்கீடு பெறுகின்றனர். இப்படி ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும். குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உடனே வழங்கப்பட்டுவிடும்.
ஒருவேளை, முழுத்தொகையை செலுத்தியிருந்தும், விற்பனை பத்திரத்தை பெறாதவர்கள் மற்றும் நிலுவைத்தொகை உள்ளவர்கள், விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல, நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்திவிட வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தியே வருகிறது.
தவணை பணம்: ஆனாலும், ஒருசில காரணங்களால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தவணை செலுத்த தவறிவிடுகிறார்கள்.. இப்படி தவணை தவறியவர்களுக்கு வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால் நிலுவை தொகையும் அதிகமாகி கொண்டேபோகிறது. எனவேதான், சமீபத்தில் சென்னைவாசிகளுக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படி, சென்னையில் அண்ணாநகர், கே.கே.நகர், பெசன்ட் நகர், ஜெஜெ நகர் பகுதிகளில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள், நிலுவை தொகையை ஒரே தவணையாக செலுத்தினால், விற்பனை பத்திரம் உடனே வழங்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. நிலுவை தொகை செலுத்தியும், விற்பனை பத்திரங்களை பெற முடியாமல், அவதிப்படும் நிலையில், உடனடியாக பத்திரம் தருவதாக அறிவித்திருந்தது, ஒதுக்கீட்டாளர்களுக்கு பெருமகிழ்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
புது திட்டம்: இப்போது இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.. அதாவது, சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கான பகுதிகளில், முறையான ஒதுக்கீட்டு ஆணையின்றி, புதிதாக குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி 10 வருடங்களாக ஒரே இடத்தில் வசித்து வரும் குடும்பங்களும், தங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்களாம்.
இதையடுத்து இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளதாக தெகிறது.. எனவே, இவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, 10 வருடங்களாக ஒரே இடத்தில் வசித்த குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் பணிகளை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்க போவதாக சொல்கிறார்கள்..
சபாஷ்: திரட்டப்படும் விவரங்களில், தகுதியுள்ள குடும்பங்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட உள்ளதாம்.. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அரசு தரப்பில் இது சம்பந்தமான எந்தவிதமான தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications