மதுரவாயல் டூ துறைமுகம் ஈரடுக்கு சாலை.. ஈர்க்கும் மேம்பாலம்.. சென்னையே ஹேப்பி.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான ஈரடுக்கு சாலை திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.. இதற்கான பணிகளும் ஆரம்பமாகின.. ஆனால், அதற்குள் அதிமுக அரியணை ஏறியது.

கூவம் பணிகள்: கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இந்த திட்டம் இருப்பதாக சொல்லி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அதிமுக அரசு தடை விதித்துவிட்டது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதையடுத்து, மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததுமே, இதே திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டது. மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத்திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது..
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். இந்த திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதியும் வழங்கி, பணிகளும் ஆரம்பமாகின.
சாலைகள்: சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்க முனைப்பு காட்டப்பட்டது..
இந்நிலையில், இந்த மேம்பாலம் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு, அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பூங்கா, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில் முதல்வர் ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை திறந்து வைப்பார்
மதுரவாயல் : மதுரவாயல்-துறை முகம் ஈரடுக்கு மேம்பாலம் கட்டுமானத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் கட்ட ஏற்கனவே மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி முடிக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
இந்த மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் பகல் நேரங்களிலும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படும், அத்துடன், துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications