சாதாரண டிக்கெட் கூட எடுக்க வேணாம்.. அரசு பஸ்ஸில் கலை பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம்.. குட்நியூஸ்
சென்னை: இசைக்கலைஞர்களுக்கு கட்டண சலுகை அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ்.. இவர் தமிழ்நாடு இசை கல்லூரியில் கிராமிய இசை பயிலும் மாணவர் ஆவார்.. கடந்த 16ம் தேதி, இவர் திண்டுக்கல், வடமதுரையில் தன்னுடைய நிகழ்ச்சியை முடித்து கொண்டு, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார்..

இசைக்கருவிகள்: தன்னுடைய இசைக்கருவியுடனேயே பஸ்ஸில் ஏறியபோது, இசைக்கருவிகளை பஸ்ஸில் ஏற்ற டிரைவர் மறுத்துவிட்டாராம்.. இதுகுறித்து ஆகாஷ் புகார் சொன்னதையடுத்து, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதுகுறித்து விளக்க அறிக்கை அளித்துள்ளார். அதில் உள்ளதாவது:
"மாணவர் ஆகாஷ் எடுத்துவந்த இசைக்கருவியானது, பேருந்தின் உள்ளே லக்கேஜ் கேரியரில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. இப்படி நீட்டிக்கொண்டு இருந்தால், பஸ்ஸிலிருக்கும் லைட்டுகள், பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விடும் என்பதால், 6 நபர் இருக்கை அருகில் உள்ள இடத்தில் அவைகளை இறக்கி வைக்குமாறு கண்டக்டர் சொல்லி உள்ளார்.
தவறான புரிதல்: ஆனால், அவர் தவறான புரிதல் காரணமாக இதை வீடியோவாக எடுத்துக்கொண்டு, தாமாகவே பஸ்ஸிலிருந்து இறங்கி சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இக்கலைஞர்களுக்கு முழுமையாக சலுகைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது.
தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது 50% பயணக் கட்டணச் சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசைக் கருவிகள்/தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும், அரசாணைகள் 1992, 1993, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர்கள்: அதன்படி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கனவே 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகள் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆடை அணிகலன்கள்,ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம், நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி. உடுக்கை, தவில், கொல்லிக் கட்டை, தப்பாட்டம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், காவடி ஆட்டம், கரகம் ஆட்டம், பொய்கால் குதிரை மற்றும் இதர சிறிய அளவிலான கருவிகள் பேருந்தில் எடுத்து செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
நையாண்டி மேளம்: மேலும், நாட்டுப் புற கலைஞர்கள், இதரக் கலைஞர்கள் மற்றும் இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கலைஞர்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று ஊக்கம் அளித்து, உறுதுணையாக இருக்கிறது இந்த அரசு.
எனவே, இந்நிகழ்வை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில், இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அட்வைஸ்: மேலும், நாடகக் கலைஞர்கள் எடுத்து வரும் கலைப் பொருட்கள் பிற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாத படி பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications