கிரய பத்திரங்களை பொதுமக்களே தயாரிக்கலாம்.. இதோ கிரையம் மாதிரி! சர்ப்ரைஸ் தந்த பதிவுத்துறை.. ஹேப்பி
சென்னை: பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பினை பதிவுத்துறை தலைவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. இந்நிலையில், சொத்து வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில், அதற்கான மாதிரிகளை, பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களும் வெளியாகியிருக்கின்றன.
பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் சமீபகாலமாக குழப்பம் ஏற்படுவதாக தெரிகிறது.. எனவே, இதனை களையும நோக்கில் பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2 நாட்களுக்கு முன்பு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவு
அந்த உத்தரவில், "நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை, நிர்வாக மாவட்ட பதிவாளரின் ஆணை பெற்று, அதன் அடிப்படையில், டிஐஜி பரிந்துரை பெற்ற பிறகு, சார் பதிவாளரால் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
அதன்பின், திட்ட ஒருங்கிணைப்பாளர் வாயிலாக, கணினியில் அந்த பத்திரம் தொடர்பான விபரங்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்காலிக எண்கள் இதையடுத்து, ஏற்கனவே பதிவுக்கு மறுக்கும் போது, அந்த பத்திரத்துக்கு அளிக்கப்பட்ட தற்காலிக எண்ணை மீண்டும் ஒதுக்க, சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்கீகாரமில்லாத மனை
பதிவுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்படாத, தானாக திரும்ப பெறப்பட்ட பத்திரங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது. அங்கீகாரமில்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது. இந்த நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்க, மாவட்ட பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல மற்றொரு அதிரடியும் கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது, கிரைய பத்திரங்களை ஆவண எழுத்தர்களே பெரிதும் தயாரிக்கிறார்கள்.. சில அலுவலகங்களில், சார் - பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வேண்டிய ஆவண எழுத்தர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.. வேறு ஆவண எழுத்தர்கள் வாயிலாக தாக்கலாகும் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டால், இது பொதுமக்களை அதிருப்திக்குள்ளாக்குகிறது.
சார் பதிவாளர் அலுவலகங்கள்
அதேபோல, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளியாள் நுழைவதும் பெருகி வருகிறது. அதேபோல, கிரைய பத்திரங்களை பொதுமக்களே தயாரிப்பதற்கான வழிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், அதில் சிறிதான தவறு இருந்தாலும், சார்- பதிவாளர்கள் நிராகரித்துவிடுகிறார்களாம்.
எனவேதான் இதுபோன்ற புகார்களை படிப்படியாக களையும் நடவடிக்கைகளை, பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, பொது மக்கள் எளிதாக கிரைய பத்திரம் தயாரிப்பதற்கான வழிமுறைகளை, பதிவுத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்டார் 2.0 சாப்ட்வேர்
ஸ்டார் 2.0 சாப்ட்வேர் அடிப்படையிலான வெப்சைட்டில் கிரைய பத்திரத்தின் வரைவை, எளிதாக தயாரிப்பதற்கான மாதிரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வெப்சைட்டில் பொதுமக்கள் தங்களது அடையாள விபரங்களை தந்து, நுழைவு வழியாக உள்ளே செல்லலாம். அங்கு என்ன வகை பரிமாற்றம் என்பதை தெரிவித்தால், அதற்கான மாதிரி ஆவணங்கள் கிடைக்கும். அதில் சொத்து குறித்த விபரங்கள், உரிமையாளர், வாங்குபவர் குறித்த விபரங்களை கொடுத்தால், வரைவு கிரைய பத்திரம் தயாராகி விடும்.
ஏதாவது மாற்றம் வேண்டுமானால் சார் - பதிவாளர் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளலாம். இதன் அடிப்படையில் கட்டணங்கள் செலுத்துவது, டோக்கன் பெறுவது போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications