பென்சன் ஏறுது.. உதவித்தொகை உயருது.. யாருக்கு தெரியுமா? சாமிநாதன் சொன்ன 3 தகவல்.. தமிழக அரசு சர்ப்ரைஸ்
சென்னை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான தகவலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்...
தாசில்தார்: தாசில்தார் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து தந்திருப்பது அவசியமாகும்.. இதற்கான விண்ணப்பப் படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 3, 500, மருத்துவப்படி ரூ. 500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது..
ஆவணங்கள்: இந்நிலையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும், மருத்துவ படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வரும்நிலையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
3 அறிவிப்பு: அப்போது அவர் பேசும்போது, "அடுத்த வருடம் இந்த உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்... எல்லை காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் மரணம் அடையும்போது அவர்களின் ஈம செலவுக்கென ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த தொகையும் உயர்த்தி வழங்கப்படும்... அத்துடன், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படும்" என்றார்.
ஒரே நேரத்தில் 3 விதமான அதிரடி அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டிருப்பது, மூத்த அறிஞர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திவருகிறது.












Click it and Unblock the Notifications