நிலத்தை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. பட்டா வாங்கிட்டீங்களா? தமிழக அரசு சூப்பர் சான்ஸ்.. நாளை கடைசி
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது, 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. அதேபோல, கடந்த வாரம் வருவாய் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இதுகுறித்து விரிவாக கூறியிருந்தார்.

புறம்போக்கு நிலம்
முக்கியமாக, "அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். சென்னையில் 60000 க்கும் மேற்பட்ட பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்திருந்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.. இதுகுறித்து சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது.
பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள்
அதில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக பிப்.24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பிப்ரவரி 24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகள், பிப்.25-ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டம் பகுதிகளில் நடைபெறும்.
மேலும் பிப்ரவரி 26-ம் தேதி மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், பிப்ரவரி 27-ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், 28-ம் தேதி மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்டா வாங்கிட்டீங்களா - நாளை கடைசி நாள்
இந்நிலையில், நாளையுடன் முகாம் முடிவடைவதால, மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. அதில், "கடந்த பிப்ரவரி 24-ல் மாதவரம், ஆர்.கே. நகர், திருவிக நகர், கிண்டி, மயிலாப்பூர், தி.நகர் பகுதிகளிலும், பிப்ரவரி 25-ம் தேதி மாதவரம், பெரம்பூர், திரு.வி.க நகர்- வ.உ.சி நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டம் பகுதிகளிலும் முகாம்கள் நடைபெற்று முடிந்தன..
நேற்றைய தினம் மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகளில் முகாம் நடத்தப்பட்டது.. இன்று மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விரு கம்பாக்கம் திட்டம் பகுதிகளில் நடைபெற உள்ளது.. நாளைய தினம் மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications