உஷார்.. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம்
அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.. இது படிப்படியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த தாழ்வு மண்டலமானது, கடந்த நாட்களாகவே தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது... எனவே, கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது..

வலுவிழந்தது
ஆனால், அது வலுவிழக்க ஆரம்பித்தது.. தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதனால், கன மழை வாய்ப்பு படிப்படியாக குறைந்து விட்டது.. எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதி ஆகிய இடங்களில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் நேற்று முன்தினம் எச்சரிக்கை அறிக்கையை வானிலை மையம் வெளியிட்டிருந்தது.

பரவலான மழை
அந்த வகையில், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.. கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர்... இதனிடையே, இன்று முதல் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

இடி, மின்னல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென் மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் இன்று தரைக்காற்று வீசலாம் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால்,மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications