மழை..ங்க.. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர போகுதாம்.. தமிழ்நாட்டு மக்களை குளிர வைத்த ஜில் அறிவிப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 நாளைக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வழக்கத்தை விட வெயில் அதிகமாக பதிவாகி வருகிறது... தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது.

வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகு, பெரிதாக மழை எங்கும் இல்லை.. எனினும், வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட நன்றாகவே பெய்ததால், பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பிவிட்டன..

 கலக்கம் - பீதி

கலக்கம் - பீதி

கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றே நம்பப்பட்டு வந்தாலும், வறட்சியை நினைத்து லேசான கலக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வருவது பெருத்த ஆறுதலை தந்து வருகிறது.. அந்தவகையில், இன்று அதாவது மார்ச் 4ம் தேதி, நாளை மார்ச் 5ம் தேதி என 2 தினங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய தினம் சென்னை வானிலை மையம் அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தது.

 காற்றின் திசை

காற்றின் திசை

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் 4ம்தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்... ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.. நாளை 5ம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வார்னிங்

வார்னிங்

நாளை மறுநாள் 6ம் தேதியும், 7ம் தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலையின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

முன்னதாக, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, புதுக்கோட்டை தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்து மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால், இதற்கான எதிர்பார்ப்புகளும் எகிறிவருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+