முக்கிய அறிவிப்பு... நைட் டியூட்டி பார்க்கும் டிராபிக் போலீசாருக்கு பறந்த உத்தரவு.. காவல் துறை அதிரடி
தமிழக டிராபிக் போலீஸாருக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது... போக்குவரத்து உதவி ஆணையர்களும் இரவுபணி பார்த்த பிறகு மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தை இன்றுவரை கடைப்பிடித்து வருபவர்கள் நம் போலீசார்.. மக்கள் நலன் சார்ந்து அயராது உழைப்பதில் எத்தனையோ போலீஸ்காரர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது..
இவர்களுக்கு பொதுவாகவே விடுமுறை நாட்கள் என்பதே மிகவும் குறைவுதான்.. கொரோனா காலகட்டத்தில் இவர்கள் பட்ட அவதியை சொல்லவே முடியாது.. ஓய்வில்லாமல் வேலை பார்த்தார்கள்..

விடுமுறை
முக்கியமாக, அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று எதற்குமே விடுப்பு வழங்கப்படுவதில்லை... இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்ட பண்டிகை நாட்களில் தான் இவர்களின் டியூட்டி டபுள் மடங்காகிவிடுகிறது.. எந்நேரமும் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு, விடுப்பு குறைவு போன்ற காரணங்களால் இவர்களுக்கு பணிச்சுமை கூடுகிறது.. குடும்பத்தாருடனும் நேரம் செலவிட முடிவதில்லை..

குடும்ப பிரச்சனை
சில சமயம், குடும்ப பிரச்சனைகள் இதனாலேயே ஏற்படுகின்றன.. மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்... பலவித நோய்களுக்கும் இது காரணமாகிவிடுகிறது.. எனவே, காவல்துறையினருக்கும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பல நாள் கோரிக்கையாக இருந்து வந்தது... இந்நிலையில்தான், ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் போலீஸாருக்கு சிறப்பு விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன..

டிராபிக் இன்ஸ்பெக்டர்
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் போலீசாருக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் இரவு வேலை பார்க்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர், டிராபிக் எஸ்.ஐகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் இதற்கான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு பணிக்கு அடுத்த நாள் மதியம் முதல் வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரவு
மேலும், ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. இந்த ஒருநாள் விடுப்பு போலீசாருக்கு மிகுந்த பலனை தரும் என்று நம்பப்படுகிறது.. அவர்கள் குடும்பத்து உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டு, மனசுமையை குறைக்க முடியும், அத்துடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications