Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசின் விதிமுறைகள்.. இனி RTO ஆபீஸ் போக வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகன ஓட்டிகளுக்கான டிரைவிங் லைசென்ஸ் பெறும் நடைமுறையில் மத்திய அரசு இப்போது புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.. இனி ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி பள்ளிகள் மூலமாகவே உரிமம் பெறும் வசதி எளிய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இந்த புதிய விதிகள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப முறைகள் குறித்த விரிவான தகவல்களை இந்தக் கட்டுரையில் முழுமையாகக் காணலாம்..

டிரைவிங் லைசென்ஸ் பெறுவது என்றாலே முன்பு பலருக்கும் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது.. ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களை பெரிதும் சிரமப்படுத்தியது.

Driving License

டிரைவிங் லைசென்ஸ்

ஆனால் இப்போது போக்குவரத்து விதிகளில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக இந்த நடைமுறைகள் பலவும் எளிமையாகி வருகின்றன.. குறிப்பாக புதிய டிரைவிங் லைசென்ஸ் பெறும் முறையும், ஆன்லைன் விண்ணப்ப முறையும், உரிமம் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மக்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது..

முன்பு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக அனைவரும் நேரடியாக பிராந்திய போக்குவரத்து அலுவலகமான ஆர்டிஓக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

ஓட்டுநர் உரிமம் விதிமுறைகள்

ஆனால் இப்போது மத்திய அரசு அங்கீகரித்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் முறையான பயிற்சி பெற்றவர்கள் அங்கேயே தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது.. அந்த மையம் வழங்கும் சான்றிதழை கொண்டு டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும்.. இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் ஏற்படும் கூட்டம் குறையும் என்றும் பொதுமக்களின் அலைச்சல் குறையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.. அதே நேரத்தில் சில இடங்களில் இன்னும் ஆர்டிஓ தேர்வு நடைமுறைகள் தொடரும்...

புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முறை இப்போது பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.. மத்திய அரசின் "சாரதி பரிவஹன்" வெப்சைட்டிற்கு சென்று தங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்..

ஆவணங்கள் பதிவேற்றம்

அங்கு பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை சரியாக பதிவு செய்து ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.. அதன் பிறகு விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.. சிலருக்கு ஆன்லைன் தேர்வு அல்லது பயிற்சி நேரத்தைத் தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.. விண்ணப்பித்த பிறகு அதன் நிலையை வெப்சைட்டில் நேரடியாக சரிபார்க்கும் வசதியும் உள்ளது..

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால்?

ஒருவேளை உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து போனால் பதற வேண்டிய அவசியம் இல்லை.. முதலில் அந்த உரிமம் காணாமல் போனது குறித்து போலீசில் "லாஸ்ட் ப்ராபர்டி ரிப்போர்ட்" பதிவு செய்யலாம்....

சில இடங்களில் சுய அறிவிப்பும் போதுமானதாக இருக்கும்.. அதன் பிறகு "சாரதி பரிவஹன்" இணையதளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.. பழைய உரிம எண், தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து தேவையான கட்டணத்தை செலுத்தினால் சில நாட்களுக்குள் புதிய உரிமம் தயாராகிவிடும்.. பொதுவாக அது தபால் மூலம் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்..

இந்த மாற்றங்களால் ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறைகள் மெல்ல மெல்ல எளிமையாகி வருகின்றன., அரசு கொண்டு வந்துள்ள இந்த ஆன்லைன் வசதிகளை சரியாக பயன்படுத்தினால் புரோக்கர்கள் தேவையில்லாமல் பொதுமக்கள் தங்கள் வேலைகளை சுலபமாக முடித்துக்கொள்ள முடியும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+