நிலத்தை வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. நில வரைபடத்துடன் வழிகாட்டி மதிப்பு.. பதிவுத்துறையின் சர்ப்ரைஸ்
சென்னை: நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, வரைபடத்துடன் அறிவதற்கான புதிய வசதியை, பதிவுத்துறை விரைவில் அறிமுகப்படுத்த போகிறதாம்.. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பதிவுத்துறையில் நவீன வசதிகள் மெல்ல மெல்ல பெருகிவருவது, பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாகவும் திகழ்ந்து வருகிறது.
வழிகாட்டி மதிப்பு என்பது மாநில அரசாங்கத்தின்படி பதிவு செய்யக்கூடிய குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். சொத்து அதிக மதிப்புக்கு விற்கப்பட்டால், அதிக மதிப்புக்கு பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், சொத்து வழிகாட்டி மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டால், குறைந்தபட்ச மதிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.

வழிகாட்டி மதிப்பு
வழிகாட்டி மதிப்பு பொறுத்தவரை, பெரும்பாலான முக்கிய பகுதிகளில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பில் இருந்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பு மேலும்10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.. கடந்த 2024 ஜூலை 1ல் அறிவிக்கப்பட்ட நில வழிகாட்டி மதிப்புகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன.
அந்தவகையில், தமிழகம் முழுதும் உள்ள நிலங்களுக்கு தனித்தனி சர்வே எண்கள், உட்பிரிவு எண்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன... இந்த சர்வே எண் வாரியாக, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை வெளியிட்டு உள்ளது.. அதன்படி, தெரு, சர்வே எண் வாரியாக நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு மற்றும் சர்வே எண் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கூகுள் மேப்பில் துல்லியமாக அறியலாம்
இதுநாள் வரையிலும், இந்த மதிப்புகள் பட்டியல் வடிவிலேயே, பதிவுத்துறை வெப்சைட்களில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், கூகுளில் துல்லியமாக அறிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..
ஒரு சர்வே எண்ணுக்கான நிலம் எங்கே உள்ளது, என்பதை கூகுளில் மேப்பிலேயே அறிய முடியும்.. இந்த வழிகாட்டி மதிப்புகளை துல்லியமாக அறியும்படியான வசதியை பதிவுத்துறை அறிமுகப்படுத்த போகிறதாம். அதுமட்டுமல்ல, இதற்காக, TNGSI எனப்படும், தமிழக புவியிட தகவல் அமைப்புடன் இணைந்து, அதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும், விரைவில், இந்த வசதி பயன்பாட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
சர்வே எண் நிலம் எங்கே
சர்வே எண்ணுக்கான நிலம் எங்கு அமைந்துள்ளது என்பதை, அறிந்து கொள்ள, பதிவுத்துறை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
அதேசமயம், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறியபிறகு, பிழைகள் தொடர்பான புகார்கள் அதிகரித்திருப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன.. இதற்கெனவே ஒரு வெப்சைட்டை உருவாக்கி, வருவாய் துறையிடமுள்ள பட்டா விபரங்களை வெளியிட வேண்டும் என்றும், பிழையான பட்டாக்கள் தொடர்பான சரியான விபரங்களுக்கான ஆதாரங்களை, பொது மக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருவதும் நினைவுகூரத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications