சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்.. அரிசி விலையில் மாற்றம்.. மகிழ்ச்சியில் தமிழக மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாகவே அரிசி விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் அரிசியை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்திருந்தது.

Happy news for Ration Card Holders in Tamil Nadu and Do you know what are the reasons Rice rate slashed suddenly

இதற்கு பிறகு பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவாகிவிட்டது.. இதனால் நெல் விலையும் அதிகமாகிவிட்டது. எனவே, அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகளும் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தார்கள்.

காரணம் என்ன: மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் டெல்டா விவசாயிகளும் கையை பிசைந்தனர். இவையெல்லாம்தான் தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமானது.

அதாவது, சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்தது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்தது.. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையானது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது.

குட்நியூஸ்: இந்நிலையில், குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருகிறதாம்.

அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாம்.. விலையும் குறைந்து தொடங்கியுள்ளதாம்..

அரிசி விலை: அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்தும் வருகிறது. அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது... அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 6 மாதங்களை எடுத்துக் கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்தவாறே இருந்தார். அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

நிம்மதி: இந்நிலையில், அரிசி விலை குறைந்துள்ளதால், ரேஷனிலும் எந்த தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என்று நம்பப்டுகிறது.. அந்தவகையில், ரேஷன் அரிசி தாரர்களுக்கும், நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+