Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப அட்டைதாரர்களுக்கு குஷி.. ரேஷன் கார்டுடன் கிளம்பிட்டீங்களா? டைமிங் பாருங்க.. தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காக ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன்தாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர்.

Happy News for Tamil Nadu Ration Card Holders and today Special Grievance Camp in Chennai Kancheepuram districts

ஆய்வுகள்: அதேபோல, தமிழகத்தின் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது.. மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.. பொதுமக்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், அதை தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.. தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கார்டுதாரர்களை தேவையில்லாமல் வெயிலில் அலைக்கழிக்கக்கூடாது என்று ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது..

கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் 4 நாட்களுக்கு முன்புகூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்: இது எல்லாவற்றையும்விட, ரேஷன்தாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் நடத்தி வருகிறது. இந்த முகாம்கள், ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.

அதன்படி, இப்படி நடத்தப்படும் முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகாம்கள்: அந்தவகையில் மார்ச் மாதத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று 9ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

குறைபாடுகள்: மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்திருக்கிறார்.. இன்று காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் மேல்கதிர்பூர், உத்திரமேரூர் வட்டத்தில் களியாம்பூண்டி, வாலாஜாபாத் வட்டத்தில் சின்னிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கிளாய், குன்றத்தூர் வட்டத்தில் சென்னாகுப்பம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+