ஹேப்பி.. துள்ளலில் விவசாயிகள்.. தென்மேற்கு பருவ மழை குறித்த மாஸ் தகவல்.. 13 மாவட்டங்களில் இன்று மழை
இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: நாட்டில்,ஏற்கனவே கணித்ததை விட கூடுதலாக பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிவிட்டது.. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.. இதை 2 நாட்களுக்கு முன்பே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அறிக்கை
இதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.. அதில், தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

வெப்ப சலனம்
அன்படி, நேற்றைய தினம் அதாவது 1-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்தது.. இன்று 2-ம் தேதியும், தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், மறறும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

அடுத்த 2 நாட்களுக்கும் மழை
அதேபோல, நாளை 3-ம் தேதியும், நாளை மறுதினம் 4-ம் தேதியும் தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனிடையே, நாட்டில்,ஏற்கனவே கணித்ததை விட கூடுதலாக பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா சொன்னதாவது:

103 சதவீதம்
இப்போதைக்கு தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது... ஆனால் இந்த முறை கூடுதலாகவே, பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும்.. கடந்த வருடம் பருவ மழை 99 சதவீதம் இயல்புக்கு இருந்தது..

இயல்பை விட அதிகம்
இதுவே, 2020-ல் இயல்புக்கு அதிகமாக 109 சதவீதமும், 2019-ல் பருவ மழை இயல்புக்கு அதிகமாக 110 சதவீதமும் இருந்தது... ஆனால் இந்த முறை, பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது... அதாவது, வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம் என்கிறார்கள்... இது விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications