ஹேப்பி ஸ்ட்ரீட்டில் செம ஹேப்பி.. "மன அழுத்தம் குறைகிறது.." கலக்கல் டான்ஸ் போடும் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி இன்று சென்னை அண்ணா நகரில் நடத்தப்பட்ட ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் இந்த நிகழ்ச்சியால் மன அழுத்தம் வெகுவாக குறைவதாகத் தெரிவித்தனர்

சென்னை என்பது எப்போதும் பரபரப்பாக இருக்கும் நகரம்.. வார நாட்கள் முழுக்க ஓடி உழைக்கும் மக்கள்.. வார இறுதி நாட்களில் வீடுகளிலேயே ரெஸ்ட் எடுப்பார்கள்.

Chennai happy street

ஆனால், சென்னைவாசிகள் ஒன்றுகூடி ரிலாக்ஸ் ஆக எந்தவொரு முன்னெடுப்பும் இல்லாமலேயே இருந்தது. அந்த நிலையை மாற்றவே சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி: வெளிநாடுகளில் வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றாக ஆடி, பாட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நமது தமிழகத்திலும் அதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பிற்குச் சென்னையில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

எப்போதும் கார், பைக் என வாகனங்களில் நிரம்பி இருக்கும் சென்னை சாலைகள் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வுகளின் போது மட்டுமே மக்களால் நிரம்பி இருக்கிறது. ஆட்டம், பாட்டம் என களைக்கட்டும் இந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் அண்ணா நகர் பகுதியில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பல்வேறு நிகழ்ச்சிகள்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் நிகழ்ச்சியாக இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் இருக்கிறது. உற்சாக நடனம், பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்று இருந்தது. இதில் பெரியவர்களும் கூட குழந்தை போல் மாறி எந்தவொரு இடையூறும் இல்லாமல் டான்ஸ் ஆடி மகிழ்வார்கள்.

ஒரு முறை இந்த நிகழ்ச்சிக்கு வருவோர் கூட இதனால் ஈர்க்கப்பட்டு அடுத்தடுத்து தொடர்ந்து வருகிறார்கள். இன்று அண்ணா நகரில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பலரும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு குறித்து இதில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. காலையில் இது நல்ல ஒரு புத்துணர்ச்சியைத் தருவதாக இருக்கிறது.. டான்ஸ் மட்டுமின்றி பல விளையாட்டுகள் இருக்கிறது.

சென்னை அண்ணா நகரில் ரெடியாகுங்க மக்களே.. நாளை 'ஹேப்பி ஸ்ட்ரீட்’.. போக்குவரத்து அடியோடு மாற்றம்


மன அழுத்தம் குறைகிறது: அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோல நடத்தப்படும் நிகழ்வுகளால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்று ஒரு நாள் முழுக்க ஜாலியாக இருக்கும்.. மக்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருப்பார்கள்.. அதைப் போக்கி ரிலாக்ஸ் ஆக இந்த நிகழ்வு பெரியளவில் உதவுகிறது. எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் இந்த நிகழ்வு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்றனர்.

இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்குப் பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+