Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மீசை வெச்ச ஆம்பள".. அதைவிடுங்க, "செருப்படிக்கு பாலிஷ்".. செங்கல் திருடன் வேற.. அதுக்குன்னு இப்படியா

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதியின் பிரச்சாரங்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.. அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்கள் தொண்டர்களுக்கு குஷியையும், தெம்பையும் தந்து வந்தாலும், அவைகள் வேறு சில மாதிரியான தாக்கங்களையும் ஏற்படுத்தி வருவதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

அன்றைய காலகட்டத்தில், ஏராளமான கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் பரஸ்பர நட்புறவு கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் மரியாதை கொடுத்தனர். அதேபோல, கர்மவீரர் காமராஜரும் - அறிஞர் அண்ணாவும் சிறந்த முதல்வராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியதுடன் பல விஷயங்களில் இருவரும் இணைந்தே செயல்பட்டனர்.

அதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் - திமுக தலைவர் கருணாநிதி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து பணியாற்றினாலும் அவர்களுக்குள்ளேயான நட்பும் மரியாதையும் இறுதி வரை குறையாமல் இருந்தது..

 கலைஞர் சுரீர்

கலைஞர் சுரீர்

இதற்கு அடுத்ததாக, முந்தைய காலத்தினைப்போல் இல்லையென்றாலும் கூட, கருணாநிதியும், ஜெயலலிதாவும், கண்ணியத்தையும் வார்த்தை வரம்புகளையும் இறுதிவரை கடைப்பிடித்தனர். மறைந்த ஜெயலலிதா, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசும்போதாகட்டும், திமுகவை வசைபாடுவதாகட்டும், அதிலேயும் கூட ஒரு அளவுகோலை கடைப்பிடித்தார். அதைபோன்று, திமுக தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதாவை, "அந்த அம்மையார்" என்றேதான் அழைத்தார். இத்தகைய அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது.

 கண்ணிய பேச்சுக்கள்

கண்ணிய பேச்சுக்கள்

தமிழகத்தில் நல்லமாதிரியாக இப்படி சென்றுகொண்டிருந்த அரசியல் நாகரீக களம் தற்போது தடம் மாறி பயணித்து கொண்டிருப்பது வேதனையை தந்து வருகிறது.. வழக்கமாக தேர்தல் என்றாலே, ஆளும்கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும், எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சி தூற்றுவதும் என மாறி மாறி பிரச்சாரங்களில் நடப்பது இயல்புதான்.. குறைகளையும், புகார்களையும் விமர்சிப்பதும் இயல்புதான்.. அதேசமயம், தடித்த வார்த்தைகளை, கண்ணியம் நிறைந்த பிரச்சாரங்களை முன்வைப்பதும் அவசியமாகிறது.

 மீசை ஆம்பள

மீசை ஆம்பள

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.. அப்போது, "நீ சரியான ஆம்பளையா இருந்தால்.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தால்.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி.. உங்களுக்கு திராணி கிடையாது. தெம்பு கிடையாது.. அதிமுகவை நேரடியாக சந்திக்கும் திறமை கிடையாது. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி... ஏழைக்கு நீ காசு கொடுத்து கூட்டி வந்து தங்க வைத்திருக்கிறாயே, அவர்களை வைத்து வாக்கு போட சொல்கிறாயே.. அதிமுகவை எதிர்க்கும் திறன் உங்களுக்கு ஏன் இல்லை என்று பொதுமக்கள் முன்னிலையில், பிரச்சாரத்தில் கேட்டிருந்தார்.

 தடித்த வார்த்தை

தடித்த வார்த்தை

இதெல்லாம் பேசியது எடப்பாடிதானா? என்ற சந்தேகத்தில் தமிழக மக்கள் உறைந்தனர்.. காரணம், எடப்பாடியை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சிக்கக்கூடியவர்.. நேரடியாகவும், துணிச்சலாகவும் எதிர்தரப்பினரை கேள்விகளால் துளைக்க கூடியவர்.. செய்தியாளர்கள் சந்திப்பு என்றாலும்கூட, தன் ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். ஆனால், அவர் முதல்வராக பதவிவகித்தபோதும் சரி, எதிர்க்கட்சியாக பதவியில் உள்ளபோதும்சரி, இத்தனை வருட காலத்தில் திமுகவை தடித்த வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததே கிடையாது.. ஆனால், முதல்முறையாக இந்த ஆண்மை விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதத்தையும், கேள்விகளையும், கண்டனங்களையும் சுமந்து திரிந்தது.

ஆம்பளையா

ஆம்பளையா

"நீ ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வந்து பாரு" என்று ஸ்டாலினுக்கு, அன்று ராஜேந்திர பாலாஜி பொதுவெளியில் சவால்விட்டபோதே, அவரை எடப்பாடி கூப்பிட்டு கண்டிக்கவில்லை என்பதை திமுகவே பலமுறை சுட்டிக்காட்டியிருந்தது.. இப்போது ஆச்சரியம் என்னவென்றால், திமுக தரப்பிலேயே அப்படிப்பட்ட தடித்த வார்த்தைகள் வெடித்துள்ளது தான் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.. நேற்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "காலில் விழுந்து முதல்வரானவர் மீசையை பற்றி பேசுகிறார் என்று ஈபிஎஸ்-க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 2 பெண்மணிகளின் செருப்படிக்கு பாலிஷ்போடும் பிரஷ் ஆக இருந்தது அவரது மீசை" என்றார் உதயநிதி,.

 நாகரீக ஸ்டாலின்

நாகரீக ஸ்டாலின்

எடப்பாடியின் தரம்தாழ்ந்த மீசை விமர்சனத்துக்கு பதில் தருவதாக நினைத்து, இன்னொரு தரம்தாழ்ந்த வார்த்தைகளையே உதயநிதி வீசியிருப்பதாக தெரிகிறது. எவ்வளவுதான் எல்லை மீறிய கோபம் என்றாலும், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகளை எங்குமே பயன்படுத்தியது கிடையாது.. யாரையுமே மலிவான வார்த்தைகளில் விமர்சித்ததும் கிடையாது.. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கோவை தொகுதியில் மட்டும் சற்று அதிக நேரம் எடுத்து, பிரச்சாரம் செய்தார்.. அதற்கு காரணம், எஸ்பி வேலுமணி மீது எழுந்திருந்த ஊழல் குற்றச்சாட்டுகளும், புகார்களும்தான்.

தடித்த வார்த்தை

தடித்த வார்த்தை

அப்போதுகூட, பிரச்சாரத்தில் பேசும்போது, "மிஸ்டர் வேலுமணி என்று குறிப்பிட்டுதான், ஆவேசமாக பேசியிருந்தாரே தவிர, ஒருவார்த்தைகூட எல்லைமீறி பேசவில்லை என்பதை நினைவுகூர வேண்டி உள்ளது.. ஆனால், உதயநிதியின் நேற்றைய விமர்சனங்கள் பேச்சுக்கள் லேசாக அதிர வைத்ததாகவே தெரிகிறது. இப்போதைக்கு திமுகவின் மொத்த பலமும் சரி, வருங்காலமும் சரி, உதயநிதியை முன்னிறுத்தியே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்.... சமூகத்தையே புரட்டி போடும் சக்தி படைத்த இளைஞர் அணியை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் நிலையில்... தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியதை எளிதாக எடுத்து கொண்டு நம்மால் கடந்து விட முடியவில்லை. காரணம், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வையும், உதயநிதியின் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், இளைஞர்களும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.

 செங்கல் திருடன்

செங்கல் திருடன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செங்கல் திருடன் என்ற வார்த்தையை பயன்படுத்தி உதயநிதியை விமர்சித்துள்ளது அதைவிட அதிர்ச்சியை கூட்டிவருகிறது.. ஆன்மீகத்துடனும், அறநெறியுடனும் வாழ்கிறோம் என்றும், தமிழகத்தில் தாமரை மலர வைக்காமல் விடமாட்டோம் என்றும் சொல்லிக்கொள்ளும் பாஜக தலைவர்களா இப்படி பேசுவது என்ற ஆச்சரியம் சூழ்ந்துள்ளது.. இத்தனை காலம் தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தராஜன், இப்படிப்பட்ட வார்த்தைகளை ஒருக்காலும் பயன்படுத்தியது கிடையாது..

 குமரியார் மகள்

குமரியார் மகள்

"குமரியார் மகள் அரசியல் நாகரீகத்துடன் இருப்பார்" என்றும் "மக்கள் விரோத கட்சியிலே அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது" என்றும் கருணாநிதியே ஒருமுறை மனம்திறந்து பாராட்டியிருந்தார். அப்படிப்பட்ட கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அண்ணாமலை, தன் கட்சி கொள்கைகளை வலியுறுத்தாமல், எதிர்க்கட்சிகளின் அரசியலை விமர்சிக்காமல், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், உதயநிதியின் ஒற்றை செங்கல் குறித்து பேசியுள்ளார்..

கடிவாளம்

கடிவாளம்

ஆகமொத்தம், ஈரோடு இடைத் தேர்தல் எல்லாவகை அநாகரீக பேச்சுக்களுக்கும் சாட்சியாகியுள்ளது... இந்த தலைவர்களின் பேச்சுக்கள், விளிம்பு நிலை மக்களின் வலிகளையோ, அவர்களின் தேவைகளையோ, அழுத்தி சொல்வது போல தெரியவில்லை.. ஆனால், எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் தனிநபர் வார்த்தை தாக்குதல்களுக்கு கடிவாளம் போடப்பட்டே ஆக வேண்டி உள்ளது.. மீண்டும் ஒரு கண்ணியமான கலாச்சார சூழலுக்குள், அரசியல் நாகரீக சூழலுக்குள் நாம் திரும்பி வர வேண்டிய அவசியமும், நெருக்கடியும் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+