• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தரமான சம்பவம்".. ராகுல் வீசிய வெடியில் "வாடிய" தாமரை?.. கவனிக்கும் பாஜக.. காலரை தூக்கும் கதர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, திமுக கட்சிகளின் பரபரப்புகளுக்கு நடுவே பாஜகவும் தன்னுடைய அதிரடியை சத்தமில்லாமல் துவங்கி உள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்றுதான், அனைத்து தமிழக கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தும் வருகிறது.

எம்பி தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக பாஜகவும் தன்னுடைய வியூகத்தை 6 மாதங்களுக்கு முன்பேயே வகுக்க ஆரம்பித்துவிட்டது.

அதனால்தான், அதற்கான முதல் ஆலோசனை கூட்டத்தை மதுரையில் அன்றே துவங்கினார் மாநில தலைவர் அண்ணாமலை.. அப்போது அவர் பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றுகூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர் அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

 2 சீக்ரெட்டுகள்

2 சீக்ரெட்டுகள்

இதனிடையே, பிரதமர் சமீபத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, அந்த 2 முக்கிய அட்வைஸ்களை தந்திருந்தார்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.. மற்றொன்று, தமிழகம் முழுக்க அனைத்து ஓட்டு சாவடிகளிலும் பாஜக பூத் கமிட்டிகளை அமையுங்கள்" என்று பிரதமர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது... இப்போது விஷயம் என்னவென்றால், அந்தந்த மாவட்டங்களில் பாஜக சீனியர்கள் தங்கள் களப்பணியில் வேகம் எடுத்துள்ளனர்.. அதில் ஒருசிலருக்கு இப்பவே சீட் கன்பார்ம் என்பதுபோல, பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.. அதில் ஒருவர்தான் பொன்.ராதாகிருஷ்ணன்.

 பொன் ராதா

பொன் ராதா

கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணன், சமீபகாலமாகவே பம்பரமாக தொகுதியை சுற்றி சுற்றி வருவதாக கூறப்பட்டது.. நிர்வாகிகள் போன் போட்டாலும் எடுத்து பேசாத பொன்.ராதா, இப்போதெல்லாம் நிர்வாகிகளுக்கு தானே போனை போட்டு, தொகுதி வளர்ச்சி குறித்து பேசி வருகிறாராம்.. மற்றொரு பக்கம் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்பட்டது.. அதாவது, தினமும் ஏதாவது ஒரு கிராம கோயிலுக்கு சென்று மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

 அங்கலாய்ப்பு

அங்கலாய்ப்பு

இந்த தீவிரத்தை பார்த்துதான், பொன்.ராதாவுக்கும் சீட் கிடைச்சிடும் போலயே என்று வியந்து சொல்லி வருகிறார்கள் குமரி பாஜகவினர்.. இருந்தாலும், இப்படி சீனியர்களுக்கே பொறுப்புகளை தந்து கொண்டிருந்தால், அடுத்துள்ளவர்கள் மேலே வர வேண்டாமா? அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டாமா? பொன்.ராதாவே எத்தனை முறை பதவி வகிப்பார்? என்ற அங்கலாய்ப்புகளும் சலசலப்புகளும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலிதான் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 நோ பந்தா - நோ கெத்து

நோ பந்தா - நோ கெத்து

ராகுல் குமரியில் காலை வைத்ததுமே, பாஜகவுக்கு லேசான கலக்கம் சூழ்ந்துவிட்டதாம்.. குமரியில் இருந்த 4 நாட்களும், ராகுல்காந்தியின் ஒவ்வொரு அசைவுகளும், செயல்பாடுகளும் அனைவரையும் ஈர்த்தன.. எளிய மக்கள் ராகுலை நெருங்கி, சகஜமாகவும், இயல்பாகவும், பாசமாகவும் பேசினர்.. ஒரு தேசிய தலைவர் என்ற பந்தா இல்லாமல், வழக்கம்போல் ராகுல் தமிழக மக்களிடம் அன்பை பொழிந்தது, கூடுதல் மகிழ்ச்சியை தந்துவிட்டது. ராகுலின் டி - ஷர்ட் முதல் அவரது நடைபயணம் வரை எதிர்க்கட்சிகள் என்னதான் விமர்சித்து வந்தாலும், குமரி மக்கள் இந்த முறை ராகுலை, தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

களப்பிணி

களப்பிணி

இதுபாஜகவுக்கு கடுப்பை தந்துவருகிறது.. இத்தனை நாளும் தொகுதிக்குள் ரவுண்டுகட்டி அடித்து, களப்பணியில் இறங்கிவரும் நிலையில், திடீரென மொத்த இமேஜ்-ம் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிடும் போலயே என்று பொன்.ராதா தரப்பும் யோசிக்கிறது.. அதனால்தான், ராகுல் மீதும், கேஎஸ் அழகிரி மீதும் பொன்.ராதா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. நரிக்குளம் பகுதியில் உள்ள பாலத்தை கடந்த 2019-ல் திறந்து வைத்தது பிரதமர் மோடிதான்.. இந்த பாலத்தில், ராகுல் நடைபயணம் தொடங்கவிருந்தார்.. அப்போது, பாலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை யாரோ சேதப்படுத்தி விட்டனர்.

 கல்வெட்டு

கல்வெட்டு

இது நிச்சயம் கே.எஸ்.அழகிரியின் தூண்டுதலில் அவரது முன்னிலையிலேயே கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதாக பாஜக தரப்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. "தேச ஒற்றுமைப் பயணம் என சொல்லிவிட்டு அழகிரி குமரி மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார என்று பொன்.ராதா ஆவேசமாக கூறியுள்ளார்.. இதற்காக ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளார்..

அழுத்தம் + முத்திரை

அழுத்தம் + முத்திரை

அதுமட்டுமல்ல, பாதயாத்திரை ஒற்றுமைக்கான பயணம் இதுவல்ல.. கலவரத்தை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம்.. இதன்மூலம் ராகுல் சில விதைகளை விதைத்து சென்றுள்ளார். ராகுல் கோயில், சர்ச், மசூதிகளுக்கு செல்வதை வரவேற்கிறேன். ஆனால் மத ரீதியாக அரசியல் பேசக் கூடாது என்றும் காட்டமாக விமர்சிக்க துவங்கி உள்ளார். இந்த 2 விதமான பிரச்சனைகளை பொன்.ராதா தற்போது கையில் எடுத்துள்ளதால், காங்கிரஸ் தரப்பு இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், ராகுல்காந்தியின் நடைபயணம், அழுத்தமான முத்திரையை குமரியில் பதித்துவிட்டு போயுள்ளது, இந்த முத்திரையை பாஜக அவ்வளவு லேசில் நீக்க முடியாது என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்..!

English summary
Has Rahul Gandhi's padayatra brought success in Kanniyakumari and what Will Pon. Radhakrishnan do the next கன்னியாகுமரி, தஞ்சாவூரில் பாஜகவின் களப்பணிகள் வேகம் எடுத்து வருகிறதாம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X