Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணாடி சில்லுகள்".. பண்ணை வீட்டில் பதறிய பன்னீரு.. "எங்க 2 பேரையும் சேர்த்து வெச்சிடுங்க".. ஓஹோஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பாக பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ஓபிஎஸ்.. இதுகுறித்து சில தகவல்கள் கசிந்து வருகின்றன.. அதேபோல, ஓபிஎஸ் தரப்பினை எடப்பாடி டீமும் உற்று கவனித்துவருகிறது.

நடத்த போகும் திருச்சி மாநாட்டை அளவுக்கு அதிகமாகவே நம்பியிருக்கிறார் ஓபிஎஸ்.. கடந்த வாரம் பாஜக அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ் தரப்பில் பேசியபோது, "நிறைய பேரணிகளை நடத்துங்கள், மாநாடுகளை நடத்துங்கள், கூட்டங்களை கூட்டுங்கள், இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து கொண்டே இருங்கள், பாஜக உங்களை ஒருபோதும் கைவிடாது" என்றாராம்.

 Has TTV Dinakaran decided on the OPSs Trichy conference and What happened at the Theni Meeting

இதையடுத்து, திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

அன்வர்ராஜா: அந்தவகையில், இப்போதைக்கு திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதிலேயே முழு கவனத்தை திருப்பி வருவதாக தெரிகிறது.. பிரிந்து போனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.. குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா, உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறாராம்.. ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தானாம்.. அதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மாநாட்டில் பங்கேற்பது டவுட் என்கிறார்கள்.. எனினும், இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பை, வைத்திலிங்கம் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறாராம்.

அதுவும் மாநாட்டு செலவு விவகாரத்தைகூட, தானே இழுத்துப்போட்டுக் கொண்டு, தன்னுடைய விசுவாசத்தை ஓபிஎஸ்ஸிடம் காட்டி வருகிறாராம் வைத்திலிங்கம்.. இந்த மாநாட்டை மட்டும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டால், தன்னுடைய பலத்தை மேலிட பாஜகவுக்கு தெரியப்படுத்திவிடலாம், இதைவைத்தே அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தையை மேலிடத்தில் நடத்தலாம் என்பதே ஓபிஎஸ் அணியின் திட்டமாக உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் என்றாலே தென்மண்டலம், முக்குலத்தோர் என்ற முத்திரை படிந்துவிட்ட நிலையில், இதை நொறுக்கும் விதமாகவே இந்த மாநாட்டை நடத்த முயன்றுள்ளாராம் ஓபிஎஸ்..

பண்ணை வீடு: எனினும், தேனி மாவட்டத்திலிருந்து ஒரு பெரிய படையை திருச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம்.. இதற்காகவே, ஓபிஎஸ் தன்னுடைய பெரியகுளம் பண்ணை வீட்டில் மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்... இந்த கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நகர், ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

 Has TTV Dinakaran decided on the OPSs Trichy conference and What happened at the Theni Meeting

அப்போது ஓபிஎஸ் பேசியபோது, "திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள், அவரவர் பகுதியில் இருந்து திரளான தொண்டர்களை கொண்டு வர வேண்டும். சசிகலா மற்றும் டிடிவி.தினகரனிடம் முதல்வர் பதவியைப் பெற்று, பின்பு அவர்களையே ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அதனால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே நம் அம்மாவின் கனவு. அதையே சசிகலா மற்றும் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்... தமிழகத்திற்கு முழுமையாக ஜல்லிக்கட்டை பெற்று தந்தவர் பிரதமர் மோடி. உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான், நான் கிடையாது..

சையது கான் பிளான்: மாவட்ட செயலாளர் சையதுகான், டிடிவி.தினகரன் சந்திப்பை நான் இதுவரையிலும் தடுக்கவில்லை... என்னையும் டிடிவி தினகரனையும் சமாதானப்படுத்தி சையதுகான் ஒன்றிணைத்து விடுவார்.. காரணம், தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காக பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், டிடிவி தினகரன் தேனி மாவட்டத்தை நிர்வகிக்கும் போது, அதிமுகவிற்காக யாரிடமும் நிதியுதவி கேட்டு கையேந்தி நிற்கவில்லை..

அவர் எப்படி தேனி மாவட்ட அதிமுக கட்சியை தன்னிடம் விட்டுச் சென்றாரோ அதே போல் நானும் இப்போது வரை எந்த தொழிலதிபரிடம் கட்சி நிதிக்காக கையேந்தவில்லை.. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் அடிக்கடி சென்னை செல்லும்போதெல்லாம் டிடிவி தினகரனை சந்தித்து பேசுவார். அதை நான் இதுவரையிலும் தடுக்கவில்லை. அதற்கு, நான் எங்கு சென்றாலும் எப்பொழுதும் உங்களுடன் தான் இருப்பேன் என சையது கான் சொல்வார்.. அவரிடம் "எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்து விடுங்கள்" என்று சொல்லியிருக்கேன்" என்று ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சாதி முத்திரை: ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, தினகரனுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.. விரைவில் டிடிவி தினகரனை சந்திக்க போவதாகவும், பலமுறை செய்தியாளர்களிடம் அறிவித்தும் வருகிறார்.. ஆனால், இதுவரை அதற்கான சந்திப்புகள் நடக்கவில்லை.. இந்நிலையில்தான், திருச்சி மாநாட்டை மையமாக வைத்து, இந்த சந்திப்பை பகிரங்கப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் நேற்றைய தினம் பண்ணை வீட்டிலும் டிடிவி தினகரன் குறித்த பேச்சு வலுவாக அடிபட்டது என்கிறார்கள்.

ஆனால், டிடிவி தினகரனை பொறுத்தவரை, ஓபிஎஸ் விஷயத்தில் ஒத்த கருத்தில்தான் பயணித்து வருகிறார். எப்போது செய்தியாளர்களிடம் பேசினாலும், ஓபிஎஸ் கருத்தை ஆதரித்தும், வலியுறுத்தியும் பேசி வருகிறார்.. எடப்பாடியை விமர்சிக்கும்போதெல்லாம் நண்பர் பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு தினகரன் பேசுவதை அனைவரும் கவனித்தே வருகின்றனர்.. ஆனால், திருச்சி மாநாட்டில் அந்த நெருக்கத்தை காட்ட வேண்டாம் என்று தினகரன் நினைக்கிறாராம்..

காரணம், ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டால், "சாதி முத்திரை" குத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம்.. தினகரனையும் என்னையும் சேர்த்து வையுங்கள் என்று ஓபனாக ஓபிஎஸ் பண்ணை வீட்டில் பேசப்பட்டதாக செய்திகள் கசிந்துவரும் நிலையில், இந்த மாநாட்டை எப்படி நடத்தி முடிக்க போகிறார்? என்பது மிகப்பெரிய ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

 Has TTV Dinakaran decided on the OPSs Trichy conference and What happened at the Theni Meeting

இதனிடையே செய்தியாளர்களுக்கு சசிகலா அளித்த பேட்டியில், "ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து முடிவெடுக்கப்படும்... எல்லோருக்கும் புரிந்து கொள்ள ஒரு காலம் வரும். அந்த கால நேரம் வரும் போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள். . நான் பொதுவான கருத்தை சொல்கிறேன். சிவில் கோர்ட்டின் முடிவு தெரியாமல் எந்த முடிவும் நிரந்தரம் இல்லை என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.

நான் எல்லாருக்கும் பொதுவான நபர். எனக்கு இது சொந்த ஊர் அது சொந்த ஊர் என்று நினைத்தது கிடையாது. ஜாதியிலும் அப்படி நினைத்தது கிடையாது.. அப்படி நினைத்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை நான் முதல்வராக கொண்டு வந்து இருக்க மாட்டேன். என்னுடைய வழி தனி வழியாகவே இருக்கும். நான் முதலில் இருந்தே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.. அப்படியானால், சாதீய முத்திரை குத்தப்பட்டுவிடும் என்பதால், ஓபிஎஸ் மாநாட்டை சசிகலாவும் தவிர்த்துவிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்... என்ன நடக்க போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+