அவரும் இங்கே வர்றாரா? விஜயகாந்த்துக்கு வராத நெருக்கடி விஜய்க்கு.. எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னாரா
சென்னை: அன்று விஜயகாந்த்துக்கே வராத நெருக்கடி இன்று விஜய்க்கு ஏற்பட்டிருக்கு,.. கரூரில் 41 பேர் இறந்துள்ள நிலையில், தனிப்பட்ட முறையில் விஜய் பொறுப்பாக முடியாது.. அவர் மீது வழக்கும் போட முடியாது.. இதற்கு ஏற்பாட்டாளர்கள் மட்டுமே பொறுப்பு.. இன்னும் சொல்லப்போனால் நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்றே சொல்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அறம்நாடு என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் சொல்கிறார். இப்படி சொல்லி, தன்னுடைய தேவையை, தன்னுடைய எதிர்பார்ப்பை, தன்னுடைய நெருக்கடியை காட்டுகிறார். தவெக கொடியை தூக்கி பிடித்தது அக்கட்சி தொண்டரா? அதிமுக தொண்டரா யாரென தெரியாது?

தவெக கொடியை யார் வேண்டுமானாலும் தூக்கி பிடிக்கலாம். அந்த கொடியை தூக்கி பிடித்த காரணத்தினாலேயே, அக்கட்சி அதிமுகவிடம் வந்துவிட்டது என்று நாம் சொல்லிவிட முடியாது. பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது போடப்பட்டு விட்டது என்று சொல்வதானால், தன்னுடைய அரசியல் அழுத்தத்தை எடப்பாடி பழனிசாமி காட்டுகிறார் என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும்.
ஆனால் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எதற்குமே பதிலில்லை.. அதை ஒரு அரசியல் கட்சியாகவே எடுத்துக்கொள்ள முடியாது.. அவர் ஒரு நடிகராகவும், அவரது அபிமானிகள் ரசிகர்கள் கூட்டமாகவுமே இருப்பார்கள்..
எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரச்சார கூட்டத்தில், இப்படி பேசுவதற்கு காரணம், அதிமுக தொண்டர்கள் மொத்தமாக சோர்ந்து போயிருக்கிறார்கள்.. எனவே அவர்களை குஷிப்படுத்துவதற்காக அப்படி பேசியிருக்கிறார்.
ஆனால், அன்று விஜயகாந்த்துக்கு அன்று அவர் சந்தித்த 2வது தேர்தலில் ஏற்பட்ட நெருக்கடி, விஜய்க்கு இன்று முதல் தேர்தலிலேயே ஏற்பட்டிருக்கிறது. 2006ல் மக்கள், இறைவனுடன்தான் கூட்டணி என்று சொல்லி, தனித்து நின்று வெற்றி பெற்றார் விஜயகாந்த். 2009 தேர்தலில் 10 சதவீத ஓட்டு வாங்கினார்.. 2011-ல் 41 சீட் வாங்கி 29 வெற்றி பெற்றார். பிறகு 7 எம்எல்ஏக்களை ஜெயலலிதா உருவி, அதற்கு பிறகு நடந்த அரசியலால் தேமுதிக கரைந்து விட்டது. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வாக்கு வங்கியும் இன்று அதலபாதாளத்தில் இருக்கு.
விஜயகாந்த் ஜெயலலிதா
2016-ல் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நிறைய சீட் விஜயகாந்த் வெற்றி பெற்றிருப்பார். ஆனால் அன்று ஜெயலலிதா 7 பேரை அதிமுகவுக்குள் இழுத்து கொண்டதுபோல திமுகவும், வெற்றி பெற்ற பாதி நபர்களை இழுத்துகொண்டால் என்னாவது? என்றுதான் விஜயகாந்த் தயங்கினார்.. திமுகவும், அதிமுகவும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்தார்
ஆனால் விஜயகாந்த்துக்கே வராத நெருக்கடி இன்று விஜய்க்கு ஏற்பட்டிருக்கு,.. 41 பேர் இறந்துள்ள நிலையில், தனிப்பட்ட முறையில் விஜய் பொறுப்பாக முடியாது.. அவர் மீது வழக்கும் போட முடியாது.. இதற்கு ஏற்பாட்டாளர்கள் மட்டுமே பொறுப்பு.. இன்னும் சொல்லப்போனால் நிர்மல்குமார், புஸ்ஸி ஆனந்த் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்றே சொல்கிறார்கள்.. நிகழ்ச்சியில் இப்படி அசம்பாவிதம் நடந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாள்ர்களே பொறுப்பாகவேண்டுமே தவிர, பொதுச்செயலாளர் கிடையாது,
துரைமுருகன் பொதுச்செயலாளர்
இதைதான் தவெக தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி நீதிமன்றத்தில் முன்வைத்தார்'.. கன்னியாகுமரியில் திமுக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்து அதில் 10 பேர் இறந்துவிட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை கைது செய்வார்களா? பொதுச்செயலாளர் என்று துரைமுருகனை கைது செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார், இதுதான் சட்டத்தின் நிலைப்பாடும்.
எனினும், தவெகவுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார்கள்.. இனிமேல் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்., இனிமேல் இதுதான் நடக்க போகிறது. எனவேதான் அதிமுகவை நாடி போவதை தவிர விஜய்க்கு வேறு வழியில்லை என்றே தெரிகிறது. எனினும் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications