"நிழல் நிஜமாகிறது".. திவாகரனை விடுங்க.. "அக்கா"வை காணோமே".. அட சசிகலாவா.. எடப்பாடிக்கு சிக்கிய மேட்டர்
சசிகலா குறித்து புகார் ஒன்றினை எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனராம்
சென்னை: நான் தான் உண்மையான பொதுச்செயலாளர், அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும், பிளவுபட்ட அதிமுகவை இணைக்காமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டுவரும் சசிகலா மீது திடீரென ஒரு அதிருப்தி அலை வீச துவங்கியிருக்கிறது.. அதுவும் அதிமுக கூடாரத்தில் இருந்தே கிளம்பி உள்ளது.. என்ன காரணம்?
சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் நடைபெற்ற திருமணம், மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையேற்று நடத்தி வைத்ததுதான். அந்தளவுக்கு திமுக பின்புலம் கொண்ட சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாகவே மாறி போனது எப்படி என்பதை இந்த தமிழகம் அறிந்த ஒன்றுதான்.
நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ஜெயலலிதாவுடனேயே இருந்தும், சில சமயங்களில் விலகியிருந்தும், இறுதி நாட்களில் உடனிருந்தும் பணியாற்றிய சசிகலாவின் செயல்பாடுகள் தமிழக மக்களின் கவனத்தை பெற்றதையும் மறுக்க முடியாது..

போயஸ் கார்டன்
அரசியல் எதிர்காலம் என்னவென தெரியாதபோதும்சரி, போயஸ் கார்டனில் அதிகாரத்தில் இருந்தபோதும்சரி, தோல்வியை தழுவி நெருக்கடியான காலகட்டங்களிலும் சரி, கணவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தபோதும்சரி, குடும்ப உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தபோதும்சரி, ஜெயலலிதாவுடனேயே பயணித்தது சசிகலா என்ற நிழல். சில நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் மணி, நம்முடைய ஒன் இந்தியா சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், சசிகலா - ஜெயலலிதா நட்பு பற்றி சொல்லியிருந்தார்.

அப்ரூவர்
"94-95ம் ஆண்டு காலத்திலேயே அமலாக்கத்துறை, சசிகலாவுக்கு நிறைய நோட்டீஸ்களை அனுப்பியும் ஒரு நோட்டீஸைகூட மதித்து, அவர் ஆஜராகவில்லை.. 996-ல், திமுக - தமாகா கூட்டணியின்போது, சசிகலாவை அப்ரூவராக மாறும்படி திமுக தரப்பு நிர்ப்பந்தித்தாககூட ஒரு தகவல் வந்தது. "அப்ரூவர் ஆயிடுங்க.. எங்களுக்கு டார்கெட் நீங்கள் கிடையாது" என்று அழுத்தங்களை தந்தும்கூட கொள்ளையடித்ததற்கு காரணம் ஜெயலலிதா தான் என்றுகூட ஒரு அறிக்கை விடும்படி கேட்டுக்கொண்டும்கூட, சசிகலா அதற்கு கடைசிவரை சம்மதிக்கவில்லை..

அக்கா.. அக்கா
தவறுகள் ஆயிரம் செய்தாலும், ஜெயலலிதாவிடம் சசிகலாவுக்கு விசுவாசம் நிறையவே இருந்தது.. அரியணை ஏறும்போதும்சரி, ஜெயிலுக்கு போனாலும்சரி, ஒன்றாகவேதான் இருப்போம் என்று, தைரியமாக ஜெ.வுடன் துணை நின்றவர் சசிகலா.. பதவியில் இல்லாவிட்டாலும் எனக்கு எல்லாமே அக்காதான் என்று விசுவாசத்தை நிலைநாட்டினார்.. அதற்கு வாய்ப்பாக அமைந்ததுதான் 96 கால கட்டம்.. காரணம், கலைஞர் இங்கே முதல்வர், ப.சிதம்பரம் அங்கே நிதியமைச்சர்.. 2 பக்கமும் இடி என்றாலும், துணிச்சலாக, உறுதியாக ஜெயலலிதாவுடன் நின்றார் சசிகலா" என்று கூறியிருந்தார் மணி.

திவாகரன்
இந்த தகவல் எல்லாம் எதற்காக என்றால், சசிகலா இப்போது டோட்டலாக மாறிப்போய்விட்டாராம்.. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் இருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.. திருவாருர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரி இருக்கிறது. இதன் ஓனர் சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான்.. அந்த கல்லூரியின் 27-வது ஆண்டு நிறுவனர் தினம் கடந்த 24-ந்தேதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திவாகரன் ஏற்பாட்டில் சசிகலாவை வரவேற்பதற்காக ஏக அமர்க்களம் செய்யப்பட்டன.

மிஸ்ஸிங்
விழா முழுக்க எங்கு திரும்பினாலும் சசிகலா படங்களும் பேனர்களும் தூள் பறந்தன. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்திலும் சசிகலா படம் நிறைந்திருந்தது. மேடை பேக்-ட்ராப் முதல், கல்லூரி வளாகம் முழுவதும் சசிகலா படங்கள் மட்டுமே இருந்ததே தவிர, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் மருந்துக்குக் கூட இல்லை. அவ்வளவு ஏன்? ஸ்டாம்ப் சைசில் கூட அவர்களின் படங்கள் இல்லை. சசிகலா புகழ்பாடும் விழாவாகவும் மட்டுமே அது நடந்தது. இதை கவனித்துவிட்டுதான் அதிமுகவினர் அப்செட் ஆகிவிட்டனர். தங்கள் மனக்குமுறலையும் கொட்டி உள்ளனர்.

அக்கா அக்கா
" இந்த கல்லூரியை உருவாக பின்புலமாக இருந்தவர் ஜெயலலிதா. கல்லூரி கட்டுவதற்காக அனைத்து உதவிகளையும் செய்தவர். ஆனால், அவரது படம் இல்லாமல் வெறும் சசிகலாவின் படம் மட்டுமே வைத்து விழாவை நடத்தியிருக்கிறார் திவாகரன். அம்மா (ஜெயலலிதா) உயிருடன் இருந்திருந்தால் இப்படி அவரது படம் இல்லாமல் இப்படி ஒரு விழா நடந்திருக்குமா ? அம்மாவை மறந்துவிட்டார் சசிகலா. ஜெயலலிதாவை, 'அக்கா அக்கா ' என பொதுவெளியில் சொல்லும் சசிகலா, தான் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில், அதுவும் ஜெயலலிதாவால் உருவான தங்கள் குடும்ப கல்லூரி விழாவில், ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

எதிரொலி
அதேபோல, ஜெயலலிதா படம் இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதற்கு காரணமான திவாகரனையும் அழைத்து கண்டித்திருக்க வேண்டாமா? ஜெயலலிதா படம் இருந்தால்தான், நான் கலந்து கொள்வேன் என்று கறாராக சொல்லியிருக்க வேண்டும். அப்படி எதுவும் சசிகலா சொல்லவில்லையே.. அதனால் ஜெயலலிதாவை சசிகலா மறந்து விட்டார்" என்கிற கொந்தளிப்பு எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகளிடம் எதிரொலிக்கிறது... இதனை எடப்பாடியின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளார்களாம்..!!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications