Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#தமிழகவேலைதமிழருக்கே.. டிவிட்டரில் அனல் பறக்கும் நாம் தமிழர் பிரச்சாரம்.. டிரண்டான ஹேஷ்டேக்!

ட்விட்டரில் #தமிழகவேலைதமிழருக்கே.. என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    #TamilNaduJobsForTamils | அனல் பறக்கும் நாம் தமிழர் பிரச்சாரம்! டிரண்டாகும் ஹேஷ்டேக்!- வீடியோ

    சென்னை: தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் மூலம் இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்த் தேசிய பேரியக்கம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர். தமிழர்களை தமிழகத்திலேயே அநாதைகளாக்கும் வேலையை தடுக்க வேண்டி இந்த பிரச்சாரத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ளது.

    தமிழர்களுக்கு எங்கே போனாலும் சரியான வேலை கிடைப்பதில்லை.. குறிப்பாக மத்திய அரசு துறைகளில் தமிழர்கள் என்றாலே புறக்கணிப்பு, அவமதிப்புதான்!

    மேலும் தமிழகத்தில் காலி பணியிடங்கள் இருந்தாலும், அங்கு வடமாநிலம், அல்லது வேற்று மாநில இளைஞர்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

    புறக்கணிப்புகள்

    இப்படிப்பட்ட புறக்கணிப்பு ரயில்வே துறையில் நிறையவே நடந்து வருகிறது. அதனாலதான் நாம் தமிழர் கட்சியும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் அடிக்கடி இதை முன்னிறுத்தி போராட்டங்கள், மறியல்களை செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழ்தேசிய பேரியக்கம்

    தமிழ்தேசிய பேரியக்கம்

    இன்றுகூட இப்படி ஒரு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துள்ளது. "இன்று மே 3, காலை 8 மணி முதல் "தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்" என்ற பதிவிடப்பட்டுள்ளது.

    ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    இந்த ட்விட்டர் போராட்டம்தான் இன்று வைரலாகிறது. #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் #TamilNaduJobsForTamils என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. வேலையிழந்தோர், பாதிக்கப்பட்டோர் என ஏராளமானோர் தங்கள் மனக்குமுறலையும், வேதனையையும், ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் கமெண்ட்டுகளாக போட்டு வருகின்றனர்!

    திணிப்பு

    திணிப்பு

    இந்தப் பிரச்சாரத்துக்கான அவசியம் மக்கள் மீதும் இன்று வலிந்து திணிக்கப்படுகிறது. காரணம், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு வரலாறு காணாத அளவில் பிற மாநிலத்தவரால் அபகரிக்கப்பட்டு வருகிறது. தபால்துறை, ரயில்வே, வருமான வரித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட முற்றாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தி பேசுவோர்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    திருத்தம்

    திருத்தம்

    இதை விடக் கொடுமை, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதியிலும் ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது தமிழ் தெரிந்தவர்கள்தான் தமிழக அரசுப் பணிகளில் சேர முடியும். ஆனால் தற்போது பணியில் சேர்ந்த பின்னர் 2 ஆண்டுகள் வரை தகுதித் தேர்வு எழுத அவகாசம் விதித்து விதி திருத்தப்பட்டுள்ளதாம். இது பிற மாநிலத்தவர் மிக எளிதாக தமிழக அரசுப் பணிகளில் ஊடுருவ எளிதான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

    வாழ்க்கை தொலைப்பு

    மொத்தத்தில் தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். அதுவும் கூட இந்த ஹேஷ்டேக் பிரச்சாரம் சூடு பிடிக்க முக்கியக் காரணம். இது இப்போது டிவிட்டரில் டிரண்டிங்கில் உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+