தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க போறீங்களா.. நம்ப முடியாத மாற்றம் வரப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளீர்களா..உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால், இனிமேல் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு கிடைக்கும், உங்களுக்கு 10 நாளில் மின் இணைப்பு வழங்காவிட்டால் மின்வாரியத்திற்கு அபராதம் விதிக்கப்படும். இதற்காக சட்டத் திருத்தம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்வது தமிழக அரசு தான். தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற அமைப்பு தான் புதிதாக மின் இணைப்பு வழங்குவது, மின் விநியோகம் செய்யும் பணிகளை செய்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பிரிவு தான், புதிதாக யாராவது மின் இணைப்பு கேட்டால், அதை பரிசீலித்து மின் இணைப்பு வழங்குகிறது. ஆனால் பொதுவாக புதிய மின் இணைப்பு பெற 30 நாட்கள் வரை ஆவதாக புகார்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு வாங்கும் நபர்களுக்கு விரைவிலேயே மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, அதற்கான காரணத்தை மின் வாரிய அதிகாரிகள் இனிமேல் தெரிவித்து விடுகிறார்கள். இந்த நிலையில் புதிய மின் இணைப்புக்கு தாமதம் ஏற்படும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளையும் மின்வாரியம் செய்து ஆயத்தமாகி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எப்படிப்பட்ட அறிவிப்பு என்றால், தமிழ்நாட்டில் புதிதாக மின் இணைப்பு கேட்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் தராவிட்டால், ஒவ்வொரு நாளிற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளில் இழப்பீடு வழங்குவதும் இடம் பெற்றுள்ளது. அதாவது எப்படி என்றால், புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 7 நாட்களுக்குள் இணைப்பை வழங்கியாக வேண்டும். அப்படி வழங்க முடியாவிட்டால், 10 நாட்களுக்கு பின்பான நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
இதனை பரிசீலித்த தமிழ்நாடு மின் வாரியம், மின்சார விநியோகச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதற்கான வரைவு அறிக்கையை கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தது.
அந்த பரிந்துரைகளின் படி, "புதிய இணைப்புக்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை என தாமதம் செய்யக்கூடாது, தகவல்கள் சரியாக நிரப்பப்படவில்லை என்றால் அடுத்த 3 நாட்களுக்குள், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவருக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்களுக்கு விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும், ஒருவேளை மின் இணைப்பு வழங்க தாமதமாகும் என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் விதம் நுகர்வோருக்கு மின்வாரியம் அபராதம் செலுத்த வேண்டும்" இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வைக்க வேண்டும் அல்லது புதிதாக மின் கட்டமைப்புகளை வேறு இடத்தில் இருந்து போஸ்ட் மரம் மூலம் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என்றால் மட்டும். இழப்பீடு வழங்க வேண்டியதில்லை. மேற்கண்ட இரண்டு காரணங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், விரைவில் அமல்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications