பால் விலை உயர்வை எதிர்த்த மனு.. ஆதாரமில்லை என்று ஹைகோர்ட் தள்ளுபடி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டு உள்ளீர்கள் மனுதாரரிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை பசும் பாலுக்கு லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் என உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து கடந்த 19ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தனியார் பால் நிறுவன பாலின் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ஆவின் பாலை மட்டும் நம்பியுள்ளனர் எனவும், அரசியல் லாபத்துக்காக செலவிடும் பெருந்தொகையை மக்களின் தலையில் சுமத்தும் வகையில் இந்த விலையேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விவசாயி பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு புறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளும் உள்ளனர். டாஸ்மார்க் கடைக்கு செல்பவர்களை திசை திருப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் மனுதாரர் மீண்டும் புதிய மனுவை ஆதாரங்களுடன் தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications