தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது பாட ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதராஸா இ அசாம் என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக இருந்த உருது பாட ஆசிரியர் பணியிடத்திற்கு ஹாஜிரா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதவில்லை என்று கூறி இந்த நியமனத்துக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்க மறுத்து 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதி தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனவே ஹாஜிராவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் சுரேந்தர் அமர்வில் இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இரண்டு முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதே வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications