”நான் பணக்காரன் இல்லை” என கூறிய விஷால்.. திவாலானவர் என அறிவிக்க தயாரா?- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: லைகா தொடர்ந்த வழக்கில் திவாலானவர் என அறிவிக்க தயாரா என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதேசமயம், லைகா நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியை 30% வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்றும் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என்றும் நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதால், பணத்தைத் திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குச் செலவு தொகையையும் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார் விஷால்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் என்றும் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என்றும் நடிகர் விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்படியென்றால் திவாலானவர் என அறிவிக்க தயாரா என்று விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், 30 சதவீதம் என்படி மிக அதிக வட்டி, இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 கோடியை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications