தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு.. இடைக்காலத் தடை விதித்தது ஹைகோர்ட்
சென்னை: தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிராக கோவை பொருளாதார குற்றப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய 11 கோடி ரூபாயை திருப்பி வழங்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.
கோவையில் செயல்பட்டு வந்த யூனிவெர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்திய தனியார் நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் இருந்து 11 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 260 ரூபாய் முதலீடு பெற்றுள்ளது. நிறுவனத்தில் ஆய்வு நடத்திய கோவை பொருளாதார குற்றப் பிரிவு, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தங்களது நேர்மையை வெளிப்படுத்த நான்கு வாரங்களில் 2 கோடி ரூபாயை டிபாசிட் செய்வதாகவும், மீதத் தொகையை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையின் அடிப்படையில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, தனியார் நிதிநிறுவனத்திற்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, முதலீட்டாளர்களுக்கு 6 மாதங்களில் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழுவை அமைத்தும் உத்தரவிட்டார். இந்த குழுவில் பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆகியோரையும் நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications