சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்.. ஹைகோர்ட் இடைக்கால தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி,ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உட்பட 12 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.

hc stays taking nurses to gh on contract

அதற்கான தேர்வு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. ஆனால் தேர்வு நடைமுறையை முறையாக பின்பற்றி வெளியிடபடவில்லை எனவும் தேர்வில் நிறைய விதிமீறல்கள் உள்ளதாகவும், மற்றும் தேர்வு பட்டியலும் நியாயமான முறையில் வெளியிடபடவில்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை சென்னை வந்ததுஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை சென்னை வந்தது

இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளார்.

English summary
Madras HC has asked TN Govt not to recruit Nurses to Govt hospitals on Contract.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X