மகள் ரோஷ்னிக்கு.. அப்பா ஷிவ் நாடார் தந்த பெரிய சர்ப்ரைஸ்.. பரிசாக போன பல லட்சம் கோடி! இதுதான் கிப்ட்
சென்னை: HCL குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் தனது எச்சிஎல் நிறுவன பங்குகளை தனது மகள் ரோஷ்ணி ரோஷ்னி நாடாருக்கு வழங்கி உள்ளார். ஷிவ் நாடார் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நிறுவனம் முழுமையாக அவரின் மகள் பொறுப்பிற்கு வந்துள்ளது.
HCL கார்ப் மற்றும் வாம சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (வாமா டெல்லி) ஆகியவற்றில் உள்ள தனது பங்குகளில் 47% ஐ தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு வழங்கி உள்ளார்.

எச்சிஎல் என்பது 12 பில்லியன் டாலர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கான அனைத்து இறுதி முடிவுகளுக்கும் இனி ரோஷ்னி நாடார் பொறுப்பாவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவர் இரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும், முழு முடிவெடுக்கும் அதிகாரத்தையும் பெறுவார். வாமா டெல்லி மற்றும் HCL கார்ப்பரேஷனின் பெரும்பான்மை பங்குதாரராக மாறுவதால் இனி அந்த நிறுவனம் இவருக்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வாமா டெல்லியின் 44.17% பங்குகள் மற்றும் HCL கார்ப் நிறுவனத்தின் 0.17% பங்குகளை பெறுவதால் நிறுவனத்தில் முடிவெடுக்கும் வீட்டோ அதிகாரம் இவருக்கு வழங்கப்படும்.
மொத்தமாக அவர் வாமா டெல்லியின் 12.94% பங்குகள் மற்றும் HCL இன்ஃபோசிஸ்டம்ஸில் HCL கார்ப் நிறுவனத்தின் 49.94% பங்குகள் மீது வாக்குரிமையை வைத்திருப்பார். ஷிவ் நாடார் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நிறுவனம் முழுமையாக அவரின் மகள் பொறுப்பிற்கு வந்துள்ளது.
நிறுவனம் கைமாறுவதில் பிரச்சனை இருக்க கூடாது. அந்நியர் கைக்கு.. குடும்பத்தை தாண்டி நிறுவனம் செல்ல கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குடும்ப அளவில் நடந்த நிகழ்வில் இந்த ஷேர் மாற்றப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புக்கு முன், ஷிவ் நாடார் மற்றும் ரோஷ்னி நாடார் ஆகியோர் முறையே 51% மற்றும் 10.33% பங்குகளை வமா டெல்லி மற்றும் HCL கார்ப் இரண்டிலும் வைத்திருந்தனர். இப்போது பெரும்பான்மை ஷேர் ஹோல்டராக ரோஷ்னி நாடார் மாறி உள்ளார்.
ஷிவ் நாடார் யார்?
1945ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த ஷிவ் நாடார் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார் . HCL Technologies நிறுவனத்தை நிறுவி, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தினார். தொழிலில் மட்டுமின்றி, Shiv Nadar Foundation மூலமாக கல்வித் துறையில் பெரிய பங்காற்றி வருகிறார்.
SSN Engineering College உட்பட பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி, இலவச கல்வி உதவிகளை வழங்கி, மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தியவர். பத்மபூஷண் விருது பெற்ற இவர், இந்தியாவின் கல்வி மற்றும் தொழில்துறையில் மறுமலர்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளார். அவரது சமூக பணிகள், இந்தியாவின் எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளன.
ரோஷ்னி நாடார் யார்?
ரோஷினி நாடார் மல்ஹோத்ரா HCL Technologies நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார். 1982ஆம் ஆண்டு பிறந்த இவர், Northwestern University மற்றும் Kellogg School of Management-ல் கல்வி பயின்று, தொழில் நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தார். சமூகச் செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு, Shiv Nadar Foundation மூலமாக கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலதிபர் பெண்களில் ஒருவராக Forbes பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவரது தலைமையிலான HCL Technologies, இந்திய ஐடி துறையில் கடந்த சில வருடங்களாக வளர்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications