சர்ப்ரைஸ்.. சென்னை ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் 100 பேர் அக்கவுண்டில் திடீரென விழுந்த ரூ.13 கோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் ஹெச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கி கணக்குகளில் தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தாலும், அவர்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு தான் கொடுக்கும் என கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

அதாவது எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு கிடைக்கும் உதவி பெரிய அளவில் இருந்தால் அதனை இப்படி குறிப்பிடுவார்கள்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

தற்போது உங்களுக்கு பணம் தேவை இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அப்போது திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் அல்லது வீட்டின் வாசற்படியில் 10 கோடியோ 20 கோடி ரூபாயோ பணம் இருந்தால் எப்படி இருக்கும். நடக்கிறத பேசுங்க என நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லை நம்ம சென்னையில் தான் இப்படி ஒரு பரபர சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

13 கோடி டெபாசிட்

13 கோடி டெபாசிட்

சென்னையில் ஹெச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கி கணக்குகளில் தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி கிளையில் இருந்து வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா 13 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

தொழிற்நுட்பக் கோளாறால் தவறுதலாக இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதா? என வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, பணப் பரிமாற்றம் நடைபெற்ற 100 வங்கிக் கணக்குகளையும் வங்கி அதிகாரிகள் முடக்கி உள்ளனர். 100 பேரின் வங்கி கணக்கில் தலா 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர் கைவரிசையா?

ஹேக்கர் கைவரிசையா?

ஆனால், வங்கி தரப்பில் இருந்து முறையான புகார் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை ஹெச்டிஎப்சி வங்கியில் 100 பேரின் வங்கி கணக்கில், தலா ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது யாருடைய வங்கிக் கணக்கில் இருந்து மாற்றப்பட்டது, வங்கியின் சிஸ்டத்தை ஹேக்கர்கள் யாரும் ஹேக் செய்தார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+