ஸ்டாலின் பிரதமரானால் என்ன நடக்கும் தெரியுமா? டிகேஎஸ் இளங்கோவன் சொல்றதை பாருங்க! அப்போ "அவர்" நிலைமை?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும் என்று திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள் பல தற்போது பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர்ந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தாமல் மாநில முதல்வர்களை முன்னிறுத்தி மிகப்பெரிய கூட்டணி அமைப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
2024 லோக்சபா தேர்தலை கவனத்தில் கொண்டு மாநில கட்சிகள் பல இப்படி கரம் கோர்த்து வருகின்றன. முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகளை செய்து வருகிறார்.

தேசிய கூட்டணி
தேசிய அளவில் பாஜக அல்லாத மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள், எதிர்கட்சித் தலைவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வர மம்தா முயன்று கொண்டு இருக்கிறார். இதன் பொருட்டே உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவாக மம்தா பேசி இருக்கிறார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுடன் மம்தா பானர்ஜி போனில் பேசினார். முதல்வர் ஸ்டாலினுடனும் மம்தா போனில் பேசினார்;.

அழைப்பு
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல் குறித்து ஆலோசனை செய்வதற்காக ஸ்டாலின், கேசிஆர், உத்தவ் தாக்கரே ஆகியோரை மமதா பானர்ஜி அழைத்து உள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் உங்களில் ஒருவர் என்ற தன்னுடைய சுயசரிதை புத்தகத்திற்காக எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து உள்ளார். பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சித் தலைவர்களை ஒரு குடைக்கு கீழ் திரட்டும் முயற்சியாக இந்த அழைப்பு பார்க்கப்படுகிறது.

பிரதமர்
இந்த நிலையில்தான் சென்னையில் திருமண விழா ஒன்றில் பேசிய திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் வரவேற்பு உள்ளது. ஸ்டாலின் பிரதமராக வந்தால் இந்த நாடு செழிக்கும். மக்களின் விருப்பமும் அதுதான்.

ஆட்சி நிர்வாகம்
ஸ்டாலின் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொடுத்து வருகிறார். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று மக்களும் ஆசைப்படுகிறார்கள் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மாநில கட்சிகள் ஒன்று கூடி கூட்டணி அமைத்தால் அவர்கள் யாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி நிலவி வருகிறது. பெரும்பாலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மாநில கட்சிகள் முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில கட்சிகள்
மம்தா பானர்ஜியும் மாநில கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆசையில் இருப்பதாகவே தெரிகிறது. இன்னொரு பக்கம் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் பிரதமராக வர வேண்டும் என்று திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மம்தா இந்த திட்டத்தில் தீவிரமாக உள்ள நிலையில் ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் என்று டிகேஎஸ் இளங்கோவன் சொல்லி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications