இன்னொரு கேசும் இருக்கும்.. மாரிதாஸ் தாக்கல் செய்த மனுக்கள் இரண்டும் ஒத்திவைப்பு.. நடந்தது என்ன?
சென்னை: யூ டியூபர் மாரிதாஸ் தனக்கு எதிராக பதியப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தின் போது தமிழ்நாடு குறித்து தவறுதலாக ட்விட் செய்ததாக புகார் வைக்கப்பட்டது.
இதையடுத்து இவருக்கு எதிராக பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இரண்டு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைதானார்.

விடுதலை
ஆனால் மதுரை ஹைகோர்ட்டில் நடந்த விசாரணையில் மாரிதாஸ் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரின் ட்விட்டில் தவறு இல்லை என்று கூறிய நீதிபதி வழக்கை ரத்து செய்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில்தான், இன்னொரு வழக்கில் வரும் 27ம் தேதி வரை மாரிதாஸ் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி
தனியார் தொலைக்காட்சி தொடுத்த போலி மெயில் வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இது போக நேற்று யூ டியூபர் மாரிதாஸ் மீண்டும் நெல்லையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொரோனா காலத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பினர் கொரோனாவை பரப்பியதாக மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

கடந்த வருட கேஸ்
கடந்த ஆண்டு மீரான் என்பவர் இதற்கு எதிராக புகார் அளித்த நிலையில் மாரிதாஸ் மேலப்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டார். இது போக இன்னொரு கேசும் உள்ளது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த திமுக மாணவர் அணி நிர்வாகி உமாரி சங்கர் என்பவர் மாரிதாஸுக்கு எதிராக புகார் அளித்து இருந்தார். மாரிதாஸ் கடந்த ஜனவரியில் வெளியிட்ட வீடியோவில் தனது குடும்பத்தையும், திமுகவையும் தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டி புகார் அளித்தார்.

தூத்துக்குடி
இதில் தூத்துக்குடி காவல்நிலையத்தில் மாரிதாஸ் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கையும், மேலப்பாளையம் வழக்கையும் ரத்து செய்ய கோரி மாரிதாஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில் வாதம் வைத்த மாரிதாஸ் தனக்கு எதிராக காழ்புணர்ச்சியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.

நடவடிக்கை
இதையடுத்து யூ டியூபர் மாரிதாஸ் தனக்கு எதிராக பதியப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 20ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications