சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுங்கிடுச்சே.. மதரஸாவில் கேட்ட "அந்த" சத்தம்.. பரிதாப பிஞ்சு.. மொத்தம் 62 வருஷமாமே.. தூக்கிய போலீஸ்

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதரசா பள்ளி ஆசிரியருக்கு ஜெயில் தண்டனை தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு டீச்சருக்கு மொத்தம் 62 வருடம் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.. கேரள நீதிமன்றம் இப்படி ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.. என்ன காரணம்?

மதரஸாக்கள் குறித்த மதக் கல்வியுடன் கூடிய கல்வியானது, மாணவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மதரஸாக்கள் இதற்காகவே இயங்கியும் வருகின்றன..

மதரஸாவில் சிறுபான்மையின மாணவர்கள் மட்டுமே கல்வி பெறுகிறார்கள் என்ற நிலைமை மாறி, இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற தகவல்கள் அடிக்கடி வெளிவருவதையும் ஆரோக்கியமான சூழலாக பார்க்க முடிகிறது..

கையில் துப்பாக்கி! மதரஸா போகும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தந்த தந்தை.. குலுங்கிய கேரளா.. என்ன காரணம்?கையில் துப்பாக்கி! மதரஸா போகும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு தந்த தந்தை.. குலுங்கிய கேரளா.. என்ன காரணம்?

குறி

குறி

ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் மதரஸாக்கள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.. குறிப்பாக, மதரஸாக்களில் என்ன போதிக்கப்படுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சொல்ல வருகிறார்கள். அதிலும் இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கொஞ்சம் ஓவராகவே சென்று கொண்டிருக்கிறது.. அம்மாநிலத்தில் மதரஸாக்களுக்கான மானியத்தையே நிறுத்திவிட்டது.. சிறுபான்மையினருக்கு மதராசா கல்வி அவசியம் என்றாலும், தேசியகீதம் பாடுவதும் அவசியம் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது..

 டீச்சர் தொல்லை

டீச்சர் தொல்லை

அவ்வளவுஏன், அஸ்ஸாமில்கூட, ஒருசில மதரஸாக்களை புல்டோசர் கொண்டு அவற்றை பள்ளிகளாக மாற்றும் அளவிற்கு சென்றதையும் இங்கு நினைவுகூரத்தக்கது. இப்படி எத்தனையோ விஷயங்கள் மதராஸாவுக்கு எதிராக பாஜக தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், கல்வியை போதிக்கும் மதராஸாவிலேயே, ஒரு சிலரால் அவப்பெயர் நேர்ந்துவிடுவது கவலைக்குரியதாக உள்ளது.. சமீபத்தில்கூட தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்தது.. ஹைதராபாத்தில் சந்தோஷ் நகர் பகுதியில் இயங்கி வரும் மதரஸாவில், 21 வயது மதரஸா ஆசிரியர் ஒருவர், 14 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்ததால், கைதாகி இருந்தார்.

 துன்புறுத்தல்

துன்புறுத்தல்

கடந்த வாரம்கூட நம் சென்னையிலும் ஒரு கொடுமை நடந்தது.. சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில், மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை பீஹாரை சேர்ந்த அக்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார்... இங்கு படித்துவரும் குழந்தைகளை, பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்து சென்று அடைத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளையும் மீட்டனர். அந்த 12 குழந்தைகளும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்..

 கேபிள் ஒயர்

கேபிள் ஒயர்

பீஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால்தான், அம்மாநில குழந்தைகள் சிலர், இங்கே வந்து மதரஸா பள்ளியில் தங்கி, அரபி வகுப்புகள் படித்து வந்துள்ளார்கள்.. சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் அடித்து தாக்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக, கேபிள் வயர்களால் அந்த பிஞ்சு குழந்தைகளை அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.. இதில் சில குழந்தைகளின் உடலில் ரத்தக்காய தழும்புகளை பார்த்து அதிகாரிகளே பதறிப்போய்விட்டனர்..

 ஈரக்குலையே

ஈரக்குலையே

பல சமயம் இந்த மதரஸாவில் இருந்து அலறல் சத்தம் அடிக்கடி கேட்கும் என்றும் அந்த அலறலை கேட்டாலே தங்கள் ஈரக்குலையே நடுங்கிவிடும்" என்றும் அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. இப்போது அந்த மதரசாவை சேர்ந்த 2 பேர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில், இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.. ஆனால், இந்த சம்பவம் கடந்த 2019-ல் நடந்துள்ளது.. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் ஒரு மதரஸா செயல்பட்டு வருகிறது..

கேவலம்

கேவலம்

இங்கு படிக்க வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து கொந்தளித்த அந்த குழந்தையின் பெற்றோர், போலீசில் புகார் அளித்திருந்தனர்.. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், இப்படி ஒரு கேவலத்தை செய்தது, அப்துல் ஹக்கீம் என்பது தெரியவந்தது. இந்த அப்துல் ஹக்கீமுக்கு 30 வயதாகிறது.. மத்ரஸா-வில் இஸ்லாமிய மத போதனைகளை போதிக்கும் பள்ளியில் பணிபுரிகிறார்... இவரது சொந்த ஊர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பியை பகுதியை சேர்ந்தவர்...

 பரபர தீர்ப்பு

பரபர தீர்ப்பு

இவரை கைது செய்ததுடன், இந்த வழக்கில் பட்டாம்பி விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.. தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, குற்றவாளிக்கு 62 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்... இந்த தீர்ப்புதான் தற்போது கேரளாவில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...

 காம கொடூரன்கள்

காம கொடூரன்கள்

எவ்வளவுதான் கொடூர தண்டனைகள் தந்தாலும் இதுபோன்றவர்கள் திருந்த வாய்ப்புகளே இருப்பதில்லை.. போக்சோ சட்டம் இந்த நாட்டில் இருந்தும்கூட, இவ்வளவு தவறுகள் நடக்கிறதென்றால், அந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே அர்த்தமாகிறது.. ஆக மொத்தம், பெண் என்பவள், கைக்குழந்தையாக, சிறுமியாக, குமரியாக, தாயாக, ஏன் கிழவியாக இருக்க வேண்டும் என்றுகூட கட்டாயமில்லை.. ஆனால், அவள் "பெண்" என்ற ஒற்றை அடையாளத்துடன் இருந்தால் மட்டுமே போதும் இதுபோன்ற காம கொடூரர்களுக்கு.. இந்த அப்துல் ஹக்கீம், சாகிற வரைக்கும் "உள்ளே" கிடக்க வேண்டியதுதான்..!!

English summary
Heartbreaking news: 6 year old girl raped and the accused madaras teacher is 62 years of rigorous imprisonment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X