சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அனல் காற்று வீசுதே...புழுக்கத்தில் தவிக்கப்போகும் 26 மாவட்ட மக்கள் - எங்கெல்லாம் வெயில் சுடும்

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் எனவும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Heat wave in 26 district Tamil Nadu Chennai Met office prediction

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் ,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட நான்கிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

English summary
The Chennai Meteorological Department has forecast a rise in temperature in 26 districts including Chennai, Kanchipuram and Chengalpattu from today till April 4 due to the north-westerly winds blowing towards Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X