வானிலையில் ட்விஸ்ட்.. வெப்ப அலை முடிவிற்கு வந்தது.. 2 நாட்களில் தென் மேற்கு பருவமழை.. குட் நியூஸ்!
சென்னை: இந்தியாவில் நிலவி வந்த வெப்ப அலை முடிவிற்கு வந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்றோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பம்
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
வெப்ப அலை:
இந்த நிலையில், இந்தியாவில் நிலவி வந்த வெப்ப அலை முடிவிற்கு வந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நேற்றோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும். வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் பகுதிகளில் கனமழை பெய்யும். மலைப் பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவிலும் புயல்கள் தாக்க வாய்ப்புகள் உள்ளன.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். எப்போதும் ஜூன் முதல்வாரம் தொடங்கும் இந்த மழை இந்த முறை மே இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் திடீரென வெப்பநிலை குறைந்து வானிலை குளிராகி உள்ளது. தமிழ்நாட்டிற்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அதே சமயம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சாரல் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வானிலை:
சென்னையில் இன்று மழை பெய்யாது. மேலே குறிப்பிட்டப்படி லேசான சாரல் மழையை தவிர்த்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றில் இருந்து கடுமையான வெயில் அடிக்கும் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications