சல்லி சல்லியா விழுதே.. சிதறுதா திமுக ஓட்டு? தாமரை மலர்ந்துடும் போல.. நாடார் வாக்குகளை அள்ளுதோ பாஜக?
சென்னை: நாடார் ஓட்டுக்களை அள்ள திமுக பல்வேறு வியூகம் வகுத்து வரும்நிலையில், இதற்கு குறுக்கே பாஜக வந்துள்ளது.. ஆனால், பாஜகவுக்குள்ளேயே சில பரபரப்புகள் கிளம்பி உள்ளன. என்ன அது?
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தேர்தலில் "ஜாதி"யே முக்கிய பங்காற்றும் நிலைமையில் உள்ளது.. இதை மையப்படுத்தியே தமிழக பாஜகவும் காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறது.

வாக்கு சதவீதம்: தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது நாடார் வாக்குகளாகும்.. இந்த ஓட்டுக்கள், திமுக பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான், பல்வேறு முயற்சிகளை எடுத்து, சரத்குமாரை தங்கள் கட்சிக்கு பாஜக கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி. விருதுநகர் தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே அதிகம்... தனித்தொகுதி என்று எடுத்துக் கொண்டால், தென்காசியிலும் நாடார் வாக்குகள் கணிசமாகவே உள்ளது...
விருதுநகர்: விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை, பாஜகவின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசனின் தரப்பு ஆர்வமாக உள்ளதாம். திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்களை தந்து இப்போதே களமிறங்கிவிட்டார்களாம்..
ஆனால், இதே விருதுநகரில், கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், தன்னுடைய அண்ணன் ஜவஹருக்கு சீட் கேட்டு மேலிடத்தை அணுகி வருகிறாராம். டாக்டர் வேதா தாமோதரனும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
ஜான் பாண்டியன்: தென்காசியை குறிவைத்துதான், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் இணைந்துள்ளார்.. எனவே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எப்படியும் தென்காசியை ஒதுக்கிவிடும் என்று ஜான் பாண்டியன் வலுவாக நம்பிக் கொண்டிருக்கிறாராம்.. அப்படி தனக்கு ஒதுக்கிவிட்டால், தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ள தன்னுடைய மகள் வினோலின் நிவேதாவை களமிறக்கலாம் என்றும் யோசித்து வருகிறாராம்.
ஆனால், பாஜக அந்த தொகுதியை ஜான் பாண்டியனுக்கு விட்டுத்தருமா என்ற தெரியவில்லை.. காரணம், பாஜக ஸ்டார்ட் அப் பிரிவு மாநில தலைவர் ஆனந்தன், இந்த தென்காசி தொகுதியை மனதில் வைத்தே, பல்வேறு பணிகளை செய்து வருகிறாராம். ஆனந்தன் செய்து வைத்திருக்கும் நலத்திட்ட பணிகளை கணக்கிட்டால், நிச்சயம் அவருக்குதான் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள். தாமரை சின்னத்திலேயே ஜான் பாண்டியன் போட்டியிடுவார் என்றாலும், சீட் கிடைக்குமா? என்று தெரியவில்லை..
கிருஷ்ணசாமி: இதனிடையே, தென்காசியை டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டு வருவதால், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்படும் என்றே சொல்கிறார்கள்.. இதை கணக்கில் வைத்துதான், அதிமுக கூட்டணியை கிருஷ்ணசாமி தேர்வு செய்ததாகவும் சொல்கிறார்கள்.
அமமுகவும் தென்காசியில் வலுவாகவே உள்ளதால், பாஜகவிடம் இந்த தொகுதியை கேட்பதாக சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் இவர்களில் யாருக்காவது தென்காசி ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்..
நெல்லை தொகுதி: நெல்லை தொகுதியையும் இதுபோலவே, சரத்குமார் கேட்டு வருகிறாராம்.. ஆனால், ஏற்கனவே மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த ஒருவருடமாகவே தொகுதியில் பிசியாக இருக்கிறார்.. மீனாட்சிபுரத்தில் மத்திய இணையமைச்சர் சிங்கை அழைத்துவந்து நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார்.
அதுமட்டுமல்ல, பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை நடத்தியவர்களில் முதன்மையானவராக திகழ்ந்ததே நயினார்தான்.. இவ்வளவும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கைலேயே செய்து காத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால், எக்காரணம் கொண்டும் நெல்லையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் பிடிவாதமாக சொல்லி வருகிறாராம்.
ஆக மொத்தம், தென்மாவட்டங்களிலுள்ள நாடார் ஓட்டுக்களை குறி வைக்க பாஜக முயற்சித்து வரும்நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே கடும் போட்டா போட்டிகள் கிளம்பி உள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை!












Click it and Unblock the Notifications