சென்னை துரைபாக்கம் மென்பொருள் நிறுவன கட்டடத்தில் தீவிபத்து.. அலறி அடித்து வெளியேறிய ஊழியர்கள்
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த டைடல் பார்க் போன்ற கட்டடத்தில் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான கேன்டீன் வசதி கட்டடத்தின் மேல் மாடியில் இயங்கி வருகிறது. இந்த 9 மாடி கட்டடத்தின் கேன்டீனில்தான் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டனர். தீ அதிகமாக பரவி கரும்புகை எழுந்துள்ளது.

இதனால மேடவாக்கம், வேளச்சேரி , துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கியிருக்கிறார்கள் என தீயணைப்பு வீரர்கள் பார்த்து வருகிறார்கள். இந்த தீவிபத்தை அந்த வழியாக செல்வோர் வாகனங்களை நிறுத்தி பார்த்தபடி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications