சில இடங்களில் லேசான மழை.. இங்கெல்லாம் செம வெயில் அடிக்கும்.. இன்றைய தமிழ்நாடு வானிலை அப்டேட்!
தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க பல மாநிலங்களில் மிக கடுமையான வெயில் அடிக்கிறது. ஆம்பன் புயல் காரணமாகவும், கடுமையான காற்று சுழற்சி காரணமாகவும் வெயில் மிக கடுமையாக அடித்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
வடஇந்தியாவில் வெப்பநிலையுடன் சேர்த்து வெப்ப காற்றும் அடித்து வருகிறது. இதனால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.

தமிழகம் நிலை
இந்த நிலையில் தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் மிக கடுமையான வெயில் இன்றும் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெயில் அடிக்கும். இந்த பகுதிகளில் 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை இருக்கும்.

வடக்கு தமிழகம் நிலை
இன்னொரு பக்கம் வடக்கு தமிழகம் போலவே மத்திய தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். திருத்தணியில் வெயில் வாட்டி எடுக்கும். ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை மதுரை, திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் வேலூரில் மிக அதிகமாக வெயில் இருக்கும். இங்கெல்லாம் 42-43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை இருக்கும்.

சென்னை நிலை
சென்னையில் கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக அனல் காற்று வீசியது. இதனால் 40 - 41 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவியது. ஆனால் சென்னையில் இவ்வளவு வெப்பநிலை இன்று இருக்காது. இன்று கொஞ்சம் குறைவாக இருக்கும். வெப்ப காற்று குறையும். 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.

மக்கள் கவனம்
தமிழகத்தில் வெப்பத்துடன் சேர்த்து அனல் காற்றும் வீசும். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உச்ச வெயில் நேரத்தில் இந்த காற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும். அதனால் அப்போது வானிலை மோசமாக இருக்கும். இதனால் மக்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

மழை வானிலை
ஒரு பக்கம் வெயில் அடித்தாலும் இன்னொரு பக்கம் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருச்சி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் . அதேபோல் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான சாரல் மழை பெய்யலாம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இப்படி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications