அநியாயத்துக்கு வீசுதே வெப்ப அலை... இன்று தமிழகமெல்லாம் ஒரே வெயில்.. பொதுசுகாதார துறை அதிரடி பாருங்க
சென்னை: இன்று தேர்தல் தினத்தன்று வெப்ப அலை அதிகமாகவே வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தமிழக பொதுசுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.. அத்துடன் வெப்பநிலையும் அதிகரித்து காணப்படுகிறது.. ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் என பதிவாகியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரித்திருக்கிறது.

வானிலை மைய அறிவிப்பில், "வருகிற 21ம் தேதி வரை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும், அதற்கு அடுத்த 2 நாட்களில் சற்றே குறையக்கூடும், 19ம் தேதியன்று (இன்று) காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும்.
அசௌகரியம்: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்" என்று அறிவித்திருந்தது.
இன்று வெப்ப நிலை தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து, பொது சுகாதாரத்துறை சார்பில், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.. அந்த உத்தரவில் உள்ளதாவது:
வெப்ப அலை: "இன்று தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் வெப்பஅலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுப்போட வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அசவுகரியங்களை சந்திக்கலாம்.
இதன் காரணமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், பணியாளர்கள் தயாராக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டும். மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல், போதிய மருந்துகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அதோடு போதிய அளவிலான பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உத்தரவு: இதுமட்டுமின்றி பணியாளர்கள் எந்த நேரத்தில் அழைக்கும்போதும் உடனடியாக பணிக்கு திரும்பும் வகையில் தயாராக இருக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சொல்லும்போது, "இன்று வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், வாக்களிக்க மதிய நேரங்களில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
ஆம்புலன்ஸ்: அதுமட்டுமின்றி 2,200க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்கவும் எந்த நேரத்தில் அழைத்தாலும் பணிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாராக உள்ளது" என்றார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications