60 கிமீ வேகத்தில் சூறாவளி.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
சென்னை: நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது,.
அந்தமான் கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,

மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

6 மாவட்டங்களில் மழை
அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

தாழ்வு மண்டலமாகும்
ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக்கூடும். அதனைத் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.

சென்னை வெப்பநிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மதுரையில் வெளுத்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 9 செமீ மழையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 8 செமீ மழையும், மதுரையில் 7 செமீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 5 செமீ மழையும் பெய்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, புதுச்சேரி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை தல்லாகுளம், சேலம் கங்கைவல்லியில் தலா 4 செமீ மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களுக்கு எச்சரிக்கை அக்டோபர் 09, 10 அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 10 மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 11ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications