சென்னையில் கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு- மாலை முதல் மீண்டும் இயக்கம்!
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மாலை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான கனமழை கொட்டியது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி வெளுத்தது. சென்னையில் இயல்பைவிட கூடுதல் மழை பதிவாகி உள்ளது.
இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பயன்படுத்த திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திடவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் இன்று பாதிக்கப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் முதலில் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. பல இடங்களில் நடுவழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.

மின்சார ரயில்கள் ரத்து
பின்னர் காலை 10.30 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழித்தடத்திலும் மழைவெள்ள நீரில் தண்டவாளங்கள் மூழ்கின. இதையடுத்து எழும்பூர்- கடற்கரை இடையேயும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மின்சார ரயில் சேவைகள் அடியோடு ரத்து
அத்துடன் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் தாம்பரம்- எழும்பூர் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டன. இதையடுத்து மாலை முதல் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் இன்று மழை விடாது! இடி, மின்னலோடு கொட்ட போகுது! 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications