சென்னையில் அதிகனமழை மாலை 6 மணி வரை விமானங்கள் வராது என அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை: காற்று பலமாக வீசுவதாலும், சென்னைக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் இன்று மதியம் முதல் மாலை 6 மணி வரை, சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 15 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழைப் பொழிவு இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து கிளம்பும் 4 விமானங்களும் சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை நேற்று அறிவித்தது. மதுரை, திருச்சி, மும்பை, ஹார்ஜா விமானங்கள் வருகை, புறப்பாடு என இருவழித் தடங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இயக்கப்படும் மாலை நேர விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ, ஏர் அரேபியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் இன்று மாலை 6 மணிவரை எந்த விமானமும் சென்னை விமான நிலையத்திற்கு வராது என விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மாலை 4 மணி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications