இடி மின்னலுடன் 4 நாட்களுக்கு கனமழை..5 மாவட்ட மக்களுக்கு ரெயின் கோட் அவசியம்

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி வரைக்கும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 9 செமீ மழையும் வால்பாறையில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பந்தலூர் தாலுகாவில் 6 செமீ மழை பதிவாகி உள்ளது.

வால்பாறை தாலுகா அலுவலகம்,பார்வூட் 4, கிளென்மோர்கன்,தேவாலா,கோவிலாங்குளம், மிமிசல், அருப்புக்கோட்டை, பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இன்று கனமழை

இன்று கனமழை

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 7ஆம் தேதி கனமழை

7ஆம் தேதி கனமழை

05.07.2022 முதல் 07.07.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 இடி மின்னலுடன் கனமழை

இடி மின்னலுடன் கனமழை

8ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை

சென்னையில் மிதமான மழை

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று முதல் 6ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Recommended Video

    07 June 2022 | சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழை - வீடியோ
     சூறாவளிக்காற்று

    சூறாவளிக்காற்று

    4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும் இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+