சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து!

தொடர் மழை காரணமாக சென்னையில் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் முழுக்க கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், கொளத்தூர், வேளச்சேரி, கே.கே.நகர், பெரும்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மழை இப்போதைக்கு விடாது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு சென்னையில் அதி தீவிர கனமழை பெய்யும்.

சென்னையில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. மக்கள் தவிப்பு.. உதவி எண்கள் அறிவிப்பு! சென்னையில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. மக்கள் தவிப்பு.. உதவி எண்கள் அறிவிப்பு!

செம்பரம்பாக்கம் எப்படி

செம்பரம்பாக்கம் எப்படி

தொடர் மழை காரணமாக சென்னையில் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்ந்துள்ளது .செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 649 மில்லியன் கன அடியில் இருந்தது. மழை காரணமாக 749 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

மழை என்ன

மழை என்ன

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,182 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3500 மில்லியன் கனஅடி ஆகும். அதேபோல் சென்னையில் 16 ஏரிகள் இருக்கின்றன. சென்னையின் தாம்பரம் பகுதிகளில் பெய்த கடுமையான மழையால் அங்கு உள்ள ஏரிகள் நிரம்பி இருக்கிறது.

புழல் ஏரி

புழல் ஏரி

சென்னையின் முக்கியமான ஏரிகளான புழல் ஏரியில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. அங்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் 4 நாட்களில் புழல் நிரம்ப வாய்ப்புள்ளது.

வேறு ஏரிகள்

வேறு ஏரிகள்

மேலும் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியும் நிரம்பி இருக்கிறது. இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவையும் தாண்ட வாய்ப்புள்ளது. இதேபோல பீர்க்கன்காரணை ஏரியில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் நிரம்பி செல்கிறது.

English summary
Heavy rain in Chennai: All the main lakes in the city gonna be full soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X