இன்றும் கனமழை: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை தற்போதும் தொடர்ந்து பெய்வதால் நாகை,திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அரபிக் கடல் பகுதி மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்டவைகளில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

தமிழகத்திலும் கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலன அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் பெருமளவு திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் சேலம் எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியை பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 1.45 லட்சம் கன அடியாகவும் உள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications