Heavy rain: இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 3 மணி நேரம் கனமழை விடாது.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இதனால் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு முதல் கனமழை மீண்டும் வெளுக்க தொடங்கியது. இன்று அதிகாலையிலும் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கனமழை விட்டு விளாசியது. அதிகாலை 5 மணியளவில் இருந்தே மழை விடாமல் கொட்டி தீர்த்தது.

ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையே இன்று தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்து இருந்தது.
இந்த சூழலில் தான் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை உள்பட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 3 மணி நேரம்
"தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு (ஆரஞ்சு அலர்ட்) உள்ளது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர்
தென் மாவட்டங்கள் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். இன்று அல்லது நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது எனவும், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளார்.
இதனால் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை 3 நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை 3 நாட்களுக்கு தொடர்ந்து பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications