Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

School leave: கனமழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவை, காரைக்காலிலும் லீவு தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Cuddalore School leave Rain Chennai

கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்திலும் நேற்று மாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இன்றும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாணவ, மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.

விழுப்புரத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விழுப்புரத்தில் கனமழை பெய்து வரும் சூழலில், மாணவ, மாணவிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி,கல்லூரிகளுக்கு இங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 செமீ கொட்டிய கனமழை

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. நேற்று இரவும் மழை விடாமல் பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நேற்று அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 16 செமீ மழை பதிவானது.

கோடியக்கரை 12.6 திருக்குவளை 11.4 நாகை 10.5வேளாங்கண்ணி 10.5 செமீ மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் 8 செமீ மழை பெய்தது. முத்துப்பேட்டயில் 7.3 செமீட்டரும், திருவாரூரில் 6.4 செமீட்டரும், நீடாமங்கலத்தில் 5.5 செமீ மழையும் பதிவானது.

நெல்லை, தென்காசியில் கனமழை

தென் மாவட்டங்களிலும் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியிலும் மழை பெய்தது. இன்று காலையில் இருந்தே தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சிவகிரியில் இன்று காலையில் கனமழை கொட்டியது. மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் நேற்று ஒரே நாளில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+