கஜா 2, கஜா 3, வெறும் புரளி.. 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என எச்சரிக்கை
7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா 2-ம் இல்லை, கஜா - 3-ம் இல்லை.. எல்லாமே வெறும் புரளி என்றும் ஆனால் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கஜா புயலுக்கு முன்னும், பின்னும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. கஜா புயலுக்கு அடுத்து டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது.
கஜா கடந்த உடனேயே அடுத்து ஒரு புயல் வரப்போகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே இந்த நிலையில் வங்க கடலில் போன 18-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும் இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

உள் தமிழகத்தில் மழை
கஜா மீள்வதற்குள் இன்னொரு புயலா என தமிழகமே மிரண்டது. ஆனால் தற்போது வானிலை ஆய்வு மையம், தெரிவிக்கும்போது, "தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது.

7 மாவட்டங்களில் கனமழை
இதனால் தமிழகத்தில் 22-ந்தேதி அதாவது இன்றும், நாளையும் மிதமாக மழை பெய்யும். குறிப்பாக வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

புதுச்சேரியில் மழை
கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது. எல்லாமே புரளிதான். அதற்கு வாய்ப்பும் இல்லை. புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இவ்வாறு கன மழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து விட்டார்கள். அதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications