நிவர் கரையை கடக்கும் போது சென்னையை மிரட்டிய புயல் காற்று... கொட்டிய கனமழை
நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியதில் இருந்தே சென்னையில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் கனமழையும் பெய்யத் தொடங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியதில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் சென்னைவாசிகளும், புறநகர்வாசிகளும் அச்சத்துடனேயே இரவை கழித்தனர். பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் ஆறாக பெருகி ஓடுகிறது தண்ணீர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. கடலூல் கடந்த 10 மணிநேரத்தில் 13 .9 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 12.9 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 8.9 செமீ மழை பதிவாகியுள்ளது.

புயல் கரையை கடக்கத் தொடங்கிய நேரத்தில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டித்தீர்த்தது. சென்னையில் வீசிய காற்று பலத்த சத்தத்துடன் இருந்ததால் வீட்டிற்குள் இருளில் தவித்த மக்கள் அச்சமடைந்தனர்.
புயல் கரையை கடந்தாலும் காற்றுடன் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அரியலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலின் தாக்கத்தினால் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications