லீவ் முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்களால் நெரிசல்.. ஆத்தூர் டோல்கேட்டில் கட்டணமின்றி அனுமதி
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆயிரக் கணக்கான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணித்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டது. சனிக்கிழமையான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. அதோடு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

3 நாள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில், நாளை அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னைக்கு வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை இன்றுடன் முடிவதை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டன. இதனால், தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications